இருவர் காதல் வயப்பட்டுள்ளனர். அவர்கள் துறவியாகவும் ஆகிவிட்டார்களாம்!
என்ன ஆச்சரியாமாக இருக்கிறதா? ஆமாங்க. துறவிகள் பல விதம்.
காப்பியை விட்டால் காபி துறவி; அசைவத்தைவிட்டால் அசைவத் துறவி; என்பதைப் போல, காதலர்கள் நாணத்தை விடுவதால் நாணுத் துறவு பூனுகிறார்களாம்! அவர்கள் நாணத்தைவிட்ட துறவிகள்; எப்படி? ரொம்ப அழகா இருக்கு இல்லையா?
நான் சொல்லலைங்க. நமது வள்ளுவப்பெருமான் ஒரு அதிகாரமே வைத்திருக்கிறார் - ‘நாணுத் துறவு உரைத்தல்’ (114) என்று. அதற்கு அடுத்த அதிகாரம்தான் அலர் அறிவுறுத்தல் (115).
காதல் வயப்பட்டவர்கள் எப்படி அதை திருமணம் நோக்கி நகர்த்துவது என்று அறியாமல் இருக்கிறார்களாம். எப்படி எடுத்துச் சொல்லுவது பெரியவர்களுக்கு என்று கலங்குகிறார்களாம். இந்த அவத்தைக்கு உயிரையே விட்டுடாலாம் என்றுகூட ஆலோசிக்கிறார்களாம்.
அங்கேதான், ஒரு ட்விஸ்ட், அதாங்க திருப்பம் வருதாம். அவங்க காதல் உறவைப் பற்றி அந்த நாலு பேர் இருக்காங்களே அவங்க பேசத் துவங்கி ஊரெல்லாம் ஒரே பேச்சாயிடுச்சாம்.
அப்பாடான்னு ஒரு பெருமூச்சுவிட்டு, காதலர்கள் நிம்மதி ஆயிட்டாங்களாம். போன உயிர் திரும்ப வந்தால் போல ஆயிட்டுதாம்.
இனி அவர்கள் பார்த்துப்பாங்க!
என்ன ஒரு கற்பனை இந்தக் குறளில்:
“அலர் எழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலர் அறியார் பாக்கியத்தால்.” --- குறள் 1141; அதிகாரம் – அலர் அறிவுறுத்தல்
அதனைப் பாக்கியத்தால் பலர் அறியார் = நாம உயிரைக்கூட விட்டுடலாம் என்று இருந்த நிலை, பலருக்குத் தெரியவில்லை. அது நம்ம பாக்கியம்; அலர் எழ ஆருயிர் நிற்கும் = அந்த ஊராரின் பழிப் பேச்சுகளால்தான் இப்போ ஒரு வழி பிறக்கப் போகிறது, நம்ம உயிரும் நம்மிடை இருக்கிறது.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்… உங்கள் அன்பு மதிவாணன்.
Comments