12/02/2024 (1073)
அன்பிற்கினியவர்களுக்கு:
“தூர உறவு சேர பகை” என்று ஒரு பழமொழி இருக்கு. இது உறவுகளுக்குப் பொருந்துமோ என்னவோ அவாவிற்கு பொருந்தி வருகிறது.
அவாவைத் தள்ளி வைப்பின் இன்பம். அவாவை நெஞ்சுக்கு அருகில் வைப்பின் துன்பம்.
கல்லைக் கண்ணுக்கு அருகில் வைத்தால் பார்வையை மறைக்கும். தள்ளி வைத்தால் தெளிவு பிறக்கும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த மனித வாழ்வின் மூலம், பல உயரிய நிலைகளை எட்டவும், அழிவில்லா இன்பங்களைத் துய்க்கவும், நாம் அறிந்து கொள்ள வேண்டிய வாழ்வியல் உண்மைப் பொருள்கள் நான்கு. அவை யாவன, அறம், பொருள், இன்பம், வீடு.
அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பொருள்களுக்கும் தனிப் பகுதிகளை அமைத்த நம் பேராசான் வீடு குறித்து அங்காங்கே தொட்டுச் செல்கிறார்.
விடுவதுதான் வீடு. நாம் இந்த உலகைவிட்டு நீங்கியபின் என்ன நிகழும் என்று எவராலும் உறுதியாகச் சொல்ல இயலாது என்பதனால் விடுவது குறித்து அங்காங்கே குறிப்புகளைக் காட்டிச் செல்கிறார். அவா அறுத்தலால் அமைதியாக இந்த உலகை விட்டு நீங்கமுடியும் என்பதனால் அவற்றைக் குறித்துச் சொல்கிறார்.
அவாவினை முழுவதுமாக விலக்கிவிட்டால், நாம் இந்த உலகைவிட்டு நீங்குவது நாம் நினைத்தபடி நிகழலாம் என்கிறார். நீங்கப் போவது உண்மையான உண்மை. அப்படி இருக்கும்போது அதற்கு நம்மைத் தயார் செய்வது முக்கியம் என்கிறார்.
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும். – 367; - அவா அறுத்தல்
ஆற்ற = முற்றிலுமாக; அவாவினை ஆற்ற அறுப்பின் = அவாவினை மீண்டும் எழா வண்ணம் முற்றிலுமாக விலக்கிவிட்டால்; தவா வினை = தவிர்க்க முடியா உண்மையான உண்மையாகிய இந்த உலகைவிட்டு நீங்கும் செயல்; தான் வேண்டும் ஆற்றான் வரும் = நாம் நினைத்த வழியில் நினைத்தபடியே நிகழும்.
அவாவினை மீண்டும் எழா வண்ணம் முற்றிலுமாக விலக்கிவிட்டால், தவிர்க்க முடியா உண்மையான உண்மையாகிய இந்த உலகைவிட்டு நீங்கும் செயல், நாம் நினைத்த வழியில் நினைத்தபடியே நிகழும்.
நம் முடிவுக் காலத்தை முடிவு செய்யலாம் என்கிறார். வேண்டுமானால் தள்ளியும் போடலாம். அனைத்துமே கைக் கூடும். எப்படி என்கிறீர்களா என் நெஞ்சிற்கு நெருக்கமான அறிவாசான் நாகூர் ரூமி அவர்கள் எழுதியுள்ள திராட்சைகளின் இதயம் என்ற நூலைப் படியுங்கள். பல வாழ்வியல் இரகசியங்களைப் போகிற போக்கில் சொல்லிச் சென்றுள்ளார்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Very True. Bhagavat Gita and Upanishads also say the same truth. When one leaves this world ..more specifically drops the body. ( The Life energy /spirit/power/soul/Brahman/Atman whatever one chooses to call can choose to leave the body when it is felt that the current Body /equipment is not suitable for full filling the desires the mind has ...or the desires / Mission are completed ) Many spiritual masters say when the soul leaves it leaves every thing including body in this world and carries with it past impressions( nature) karma ( actions and thoughts. .thought is also a karma) and resultant of unfulfilled desires...So one can really decide when one wants to leave this world... very subtle ..