top of page
Search

ஆகூழால் தோன்றும் ... 372, 375, 373, 380, 371

01/05/2022 (429)

கடந்த சில நாட்களாக ஒரே தத்துவமா போயிட்டிருக்கு. ஊழ் என்ற அதிகாரத்தை உண்டு இல்லைன்னு பார்க்கலாம்ன்னு தொடங்கி அந்தப் பாதையிலே பயணம் செய்து கொண்டு இருக்கிறோம்.


ஊழ் அதிகாரத்தில் நான்கு பாடல்களை ஏற்கனவே பார்த்து விட்டோம்.


பேதைப் படுக்கும் இழவூழ் அறிவுஅகற்றும்

ஆகல்ஊழ் உற்றக் கடை.” --- குறள் 372 – காண்க 27/12/2021 (306)


“இருவேறு உலகத்துஇயற்கைதிருவேறு தெள்ளியர்ஆதலும்வேறு.” --- குறள் 375 - காண்க 11/02/2021 (25)


“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்

உண்மை அறிவே மிகும்.” ---குறள் 373 - காண்க 11/02/2021 (25)


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும்.” ---குறள் 380 – காண்க 17/03/2021 (59)


ஊழ் இரு வகைன்னு தெரியும். ஆகூழ், போகூழ் இல்லை என்றால் இழவூழ்.

இந்த அதிகாரத்தின் முதல் குறளில் அந்த இரண்டையும் வரையறுக்கிறார்.

ஆகூழால் வருவது முயற்சி; போகூழால் வருவது சோம்பல் இவ்வளவுதான்.


ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி.” ---குறள் 371; அதிகாரம் - ஊழ்


அசைவு = தளர்வு, சோம்பல்; அசைவு இன்மை = முயற்சி;

கைப்பொருள் ஆகூழால் அசைவு இன்மை தோன்றும் = கையில் பொருள் சேரும் காலம்(ஆகூழ்) வந்து விட்டால் முயற்சி தோன்றும்; போகூழால் மடி தோன்றும் = கையில் இருந்து பொருள் போகும் காலம் (போகூழ்) வந்துவிட்டால் சோம்பல் தோன்றும்.


அப்போ ரொம்ப கவனமாக இருக்கனும் போல. கைக்கு வருதா. இல்லை விட்டுப் போகுதான்னு கவனிக்கனும். அதற்கு ஏற்ற பரிகாரம் செய்யனும்.


அது என்ன பரிகாரம்?


பொருள் வருது என்றால் அதை மதித்து பாதுகாக்கனும். போயிட்டு இருக்கு என்றால் துள்ளி எழுந்து அதைப் புறந்தள்ளி வேலையைப் பார்க்கனும் அவ்வளவுதான்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




6 views2 comments
Post: Blog2_Post
bottom of page