22/03/2023 (748)
நம் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகளாக அமைந்துள்ளன என்பது நமக்குத் தெரியும். ஒவ்வொரு பாலும் இயல்களாகவும், ஒவ்வொரு இயலும் அதிகாரங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு, அதிகாரத்திலும் பத்துப் பாடல்கள் என்ற வகையில் அமைந்துள்ள நூல்தான் நம் திருக்குறள்.
இதில், அறத்துப்பாலில் நம் பேராசான் கூறியிறுப்பது ‘மூல அறம்’ குறித்தச் செய்திகள். பொருட் பாலும், காமத்துப்பாலும் 'சார்பு அறங்கள்'. இதெல்லாம் நமக்குத் தெரியும். இருந்தாலும் ஒரு நினவூட்டலுக்காக!
பொருட்பாலில், அரசியல், அங்கவியல் மற்றும் ஒழிபியல் என்று மூன்று இயல்கள் இருக்கின்றன. நாம் ‘அரசியல்’ எனும் இயலின் இறுதி அதிகாரத்திற்கு வருகிறோம். ‘இடுக்கண் அழியாமை’ என்பது இந்த அதிகாரத்தின் தலைப்பு.
இந்த அதிகாரத்திலிருந்து, நாம் சில குறள்களை ஏற்கனவே சிந்தித்துள்ளோம். மீள்பார்வக்காக காண்க 21/09/2021 (210), 12/06/2021 (110), 02/05/2021 (105)
“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்.” --- குறள் 621; அதிகாரம் – இடுக்கண் அழியாமை (63)
“வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்.” --- குறள் 622; அதிகாரம் – இடுக்கண் அழியாமை
“மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.”---குறள் 624; அதிகாரம்–இடுக்கணழியாமை
முயல்கிறோம் ஆனால் தோல்வி; மீண்டும் முயல்கிறோம் மீண்டும் தோல்வி; தொடர் தோல்விகளும் வரலாம். நம் பேராசான், ஆள்வினை உடைமையில் சொன்ன குறிப்புகளையெல்லாம் பின்பற்றுகிறோம். இருப்பினும் வெற்றி என்பது தள்ளிக்கொண்டே போகிறது. என்ன செய்ய என்று அமர்ந்துவிட்டவர்களுக்குத்தான் இந்த அதிகாரம், இடுக்கண் அழியாமை.
வரும் இடுக்கண்களால் உடைந்து போகாமல் இருப்பதுதான் இடுக்கண் அழியாமை.
விடா முயற்சி, விசுவரூப வெற்றி என்று சொல்வதுதான் இந்த அதிகாரம்.
மேலே சொன்ன அந்த மூன்று குறள்களில், பல செய்திகளை நாம் சிந்தித்துள்ளோம். ஒரு எட்டு எட்டிப்போய் கொஞ்சம் பாருங்க. ஸ்டொய்க் மவுனம் (Stoic silence) மற்றும் ஸ்டோயிசம் (Stoicism) குறித்தும் பேசியுள்ளொம். காண்க 28/04/2022 (426).
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)
Comments