இனையர் இவர் எமக்கு ... குறள் 790
Updated: Dec 13, 2021
11/12/2021 (291)
நட்பிற்கு வீற்று இருக்கை (அமரும் இடம்) எது என்று கேட்டால் ‘கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை’ அதாவது மனதில் குழப்பமின்றி தேவைப் படும் போது ஊன்று கோலாய் இருக்கும் இடம்தான் என்று நம் பேராசான் குறள் 789ல் விளக்கினார்.
நட்பு அதிகாரத்தின் கடைசிக் குறள், என்ன சொல்லப் போகிறார்?
எது நட்பு இல்லை என்பதைச் சொல்கிறார். ஒருவரை ஒருவர் உயர்த்திப் பேசுவது நட்பின் உயர்வைக் குறைக்குமாம்.
அவர் எனக்கு ரொம்பவே thick friend அப்படின்னு சொல்லி சிலர் காரியம் சாதிப்பாங்களாம் (dropping names). அந்த மாதிரி நட்பு ‘புல்லென்னும் நட்பு’ என்கிறார். அதாங்க ரொம்பவே cheapன்னு சொல்கிறார்.
நட்பில் புனைவு தேவையில்லையாம்.
தளபதி திரைப் படத்தில் கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடல்:
“காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே ..
---
நண்பன் போட்டச் சோறு நிதமும் தின்பேன் பாரு
நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன் …
இந்த மாதிரி புனைவு நட்பு இல்லையாம்.
துரியோதனனுக்கும் கர்ணனுக்கும் இடையே இருந்த நட்பை ரொம்ப அழகாகவே படம் பிடித்திருப்பாங்க மகாபாரதக் கதையிலே.
ஒருத்தரை ஒருத்தர் புகழ்ந்து பேசுவதுபோல எங்கேயும் இல்லைன்னு நினைக்கிறேன். விட்டுக் கொடுக்காம பேசுவாங்க. ஆனால், அதிலே புனைவு இருக்காது.
வெளிப்படையாக துரியோதனனின் உயர்வை கர்ணன் சொல்லும் ஒரு காட்சி அமைந்திருக்கும். அதுகூட நடந்த நிகழ்வுகளைத்தான் சொல்வதுபோல இருக்கும்.
எப்போது என்று கேட்டால், குந்தி கர்ணனிடம் தான்தான் அவனின் அம்மா என்று எடுத்துச் சொல்லி தன்னுடன் வருமாறு வற்புறுத்தும் நிலையில்தான் அமைந்திருக்கும்.
ஒருத்தரை ஒருத்தர் புகழாமலே நட்பு அங்கே வளர்ந்திருக்கும்.
இப்போதெல்லாம் புகழந்து பேசலைன்னா நமக்கு எதிரி போல இருக்குன்னு நினைச்சிடறாங்க. Like போடலைன்னு உயிரைக் கூட விடறாங்க!
குறளுக்கு வருவோம்.
“இனையர் இவர் எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.” --- குறள் 790; அதிகாரம் - நட்பு
இவர் எமக்கு இனையர் யாம் இன்னம் என்று புனையினும் = இவர் எனக்கு இப்படி, அவருக்கு நான் அப்படின்னு அடித்துவிட்டால்; நட்பு புல்லென்னும் = (அந்த) நட்பு கொஞ்சம் மட்டம்தான்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
