இறப்பே புரிந்த தொழிற்றாம் ... 977
23/08/2022 (542)
ஒரு பொருளைக் கட்டிக் காக்கும் தகுதி இல்லாதவர்களிடம் அப்பொருள் கிடைத்தால் ஒன்று அது கெடும் அல்லது அதனைப் பெற்றவர்களைக் கெடுத்துவிடும். இல்லை, இரண்டுமேகூட நடக்கலாம்.
அதே போல, தகுதி இல்லாதவர்களிடம் ஒரு பதவி கிடைக்குமானால் என்ன ஆகும் என்று நம் எல்லோருக்குமே தெரியும். இது ஒரு இயற்கை விதி.
உணராத் தகுதியால் ரொம்ப ஓவரா ஆட்டம் போடுவாங்க.
அவங்க போவாங்க ரொம்ப ‘ஓவரா’ (overஆ); அப்புறம் யாராவது வைப்பாங்க ‘காமிரா’ (camera)!
நம்ம ஊரிலே ஒரு பழமொழி இருக்கு இல்லையா, அதாங்க “குரங்குகிட்ட பூமாலை”ன்னு அதைப்போல!
அறிவியலில் என்ன சொல்கிறார்கள் என்றால், அனைத்துமே அதன், அதன் தகுதிக்கு ஏற்றவாறு stabilityயை (ஸ்த்திரத் தன்மை, நிலைத் தன்மை) நோக்கியே நகர்ந்து நிலை கொள்ளும்.
சரி, இது எல்லாம் இப்போ எதற்குன்னு கேட்கறீங்க? அதானே? இதோ வந்துட்டேன் குறளுக்கு.
சிறியார் உணர்ச்சியுள் இல்லைன்னு நேற்று பார்த்தோம். இன்றைக்கும் சிறியார்களைப் பற்றித்தான். அவர்களுக்கு இன்றைக்கு ஒரு புது பட்டம் கொடுக்கிறார் நம் பேராசான். அது தான் “சீரல்லவர்”
நேரடியாக நம்ம பேராசான் “குரங்கு-பூமாலை” ன்னு சொல்லலை அவ்வளவுதான்.
உபயோகமற்றவன் கையிலே உருப்படியான ஒன்று கிடைத்தால் அது அந்தப் பொருளுக்கும் கேடு, அவனுக்கும் கேடு என்கிறார்.
“இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல்லவர் கண் படின்.” --- குறள் 977; அதிகாரம் – பெருமை
சிறப்பும் தான் = நல்ல குடி, செல்வம், கல்வி இப்படி பல; சீரல்லவர் கண்படின் = சிறியவர்களிடம் அமைந்துவிடுமானால்;
இறப்பே புரிந்த தொழிற்றாம் = அத்தகுதிகளை தவறாக பயன் படுத்தி ரொம்ப ஆடி அழிவாங்க.
இறப்பு = தருக்கு, மிகை
ஆகையினால் குடிக்கு பெருமை இருக்காது.
நம்ம மகாகவி பாரதி சொல்கிறார்:
… படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான், போவான், ஐயோவென்று போவான் … என்கிறார் புதிய கோணங்கி எனும் பாடலில்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
