top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

உறல்முறையான் ... 885, 378

13/05/2022 (441)

உறல் என்றால் உறவு என்று பார்த்தோம். அது எப்படி வருகிறது என்றால் ‘உறல்’ என்றால் உறுதல்/அடைதல்/படுதல் என்ற பொருளிலே, நமது சொந்தங்களை அடைந்து இருப்பதனால் ‘உறல்’ உறவிற்கு ஆகி வந்திருக்கலாம். உறல் திரிந்து உறனும் ஆகும். அறம் திரிந்து அறன் ஆவதுபோல.


உறல் என்ற சொல்லை நாம் ஊழ் அதிகாரத்தின் ஒரு குறளில் பார்த்துள்ளோம். காண்க 05/05/2022 (433). மீள்பார்வைக்காக:


துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால

ஊட்டா கழியும் எனின்.” --- குறள் 378; அதிகாரம் – ஊழ்


நுகரும் பொருள் இல்லாதவர்கள், அதற்கு வகையும் இல்லாதவர்கள் துறந்து விடுவார்கள்; ஆனால், அவர்கள் துன்பப்பட்டுத் தான் ஆகவேண்டும் என்று இருந்தால் துறக்காமல் துன்பப்படுவார்கள்.


சரி உறவிலே உட்பகை வந்தால்? … இதற்கு வருவோம்.


இறல் முறையான் ஏதம் பலவும் தருமாம்!


அதாவது, அழிவினை நோக்கிய துன்பங்கள் பலவும் தருமாம். அப்போ, என்ன பண்ணனும்? இது கத்தி மேல நடப்பதைப் போன்றது. இதை மாற்ற மனப் பயிற்சி மிகவும் அவசியம். அதற்கு, நம் ஔவை பெருந்தகை காட்டிய குறிப்பு பற்றி நேற்று பார்த்தோமல்லவா, அது என்னன்னு கண்டு பிடிக்கனும்.


சரி, நாம குறளுக்கு வருவோம்.


உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்

ஏதம் பலவும் தரும்.” --- குறள் 885; அதிகாரம் - உட்பகை


உறல்முறையான் உட்பகை தோன்றின் = நெருங்கிய உறவுகளுக்கு இடையே உட்பகைத் தோன்றினால்; இறல் முறையான் ஏதம் பலவும் தரும் = அழிவினைத் தரக்குடிய துன்பங்கள் பலவும் தரும்.


ஏதம் என்றால் துன்பம், தொல்லை, குற்றம். ஏதத்திற்கு எதிர்ச்சொல் ஏமம்.

ஏமம் என்றால் பாதுகாப்பு.


தீதும் நன்றும் பிறர்தர வாரா!


“கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது”ன்னு ஒரு பழமொழி இருக்கு இல்லையா, அதைப் பற்றி ஏதாவது குறிப்பைச் சொல்கிறாரா? நம் பேராசான். நாளை பார்க்கலாம்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )






12 views2 comments

2 Comments


it is really great. Keep it up

Like
Replying to

Thanks a lot for the comments and encouragement.

Like
Post: Blog2_Post
bottom of page