top of page
Search

உழுதுண்டு வாழ்வாரே ... குறள் 1033

16/01/2022 (325)

உலகத்தில் வாழ்வது யார்?


இது என்ன கேள்வி? எல்லாரும்தான் வாழுகிறோம். நாம மட்டுமா இருக்கோம். பல வகையான உயிரிணங்களும் கூட இருக்கு.


சிறப்பாக வாழ்வது?


ஏன்? என்ன குறைச்சல் எல்லாருக்கும்? எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருக்கு…


நேற்று இரண்டு பதிவுகளைப் படிச்சேன். எப்படி உலகம் மாறிக் கொண்டே இருக்குன்னு தெரியுது. சின்ன வயதிலே நடந்து போன போது இரண்டு பக்கமும் இருந்த வயல்களைக் காணோம். தண்ணீர் நிறைந்த ஏரிகளைக் காணோம்.


விவசாய நிலங்கள் விடுதிகளாக மாறுது. இயற்கையான சூழ்நிலையில் அமைத்து இருக்காங்களாம். நகைமுரண்களுக்கு இடையில் நாம்.


இந்த மாதிரி ஒடிக்கொண்டிருப்போம் என்று நம் பேராசானுக்கு தெரிந்திருக்கும். அதான், ஒரே போடாகப் போடுகிறார். தம்பி, நீ என்ன சொல்லு, உழுது உண்டு வாழ்கிறார்களே அவங்கதான் வாழுபவர்கள். அவங்கதான் நிலையாக வாழ்பவர்கள் (sustainable living). அவங்க பின்னால் போக வேண்டியவர்கள்தான் மற்ற அனைவரும்.


அவங்களை விலக்கிவிட்டு ‘நிலையான வளர்ச்சி இலக்குகள்’ (sustainable development goals) ன்னு சொல்றீங்களே அதை அடைவது சிரமம். இந்தாங்க இந்த குறளைப் பிடிங்க, மன்னிக்க, படிங்க.


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.” --- குறள் 1033; அதிகாரம் – உழவு


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் = எல்லாருக்கும் உணவு கிடைக்கும்படி உழுகிறார்களே அந்த உழவர்கள்தான் வாழ்பவர்கள்; மற்று எல்லாம் = மீதி எல்லாம் (உழுபவர்களைத் தவிர எல்லாத்தையும் ஒரே கூட்டமாகச் சேர்த்து விட்டார்); தொழுது உண்டு பின் செல்பவர் = அவங்களை வேண்டி உண்டுதான் பின்னாடி போகனும்.


என்ன ஒரு எளக்காரம். “மற்று எல்லாம்” ன்னு போட்டு இருக்கார். யோசனை பண்ணனும்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




15 views4 comments
Post: Blog2_Post
bottom of page