top of page
Search

எப்பொருளும் ஓரார் தொடரார் ... குறள் 695

16/10/2021 (235)

சிரிப்பு குறித்த குறள்களைப் பார்த்தபோது எப்போ சிரிக்கக்கூடாதுன்னு ஒரு குறளைப் பார்த்தோம்.


தலைமை உடன் இருக்கும் போதும், ஆன்ற பெரியவர்கள் அருகில் இருக்கும் போதும் கிசு, கிசு பேசுவதும், வெடித்துச் சிரிப்பதும், தங்களுக்குள்ளே சிரித்துக் கொள்வதும் தவிர்க்க வேண்டியவைகள் என்று நம் வள்ளுவப் பேராசான் சொல்லி இருந்தார்.


இது போன்ற செய்கைகள், தலைமையால் சந்தேகக் கண்ணோடு பார்க்கப் படும். தலைமை அந்த செயல்களை ரசிக்காது. ‘கடுத்த பின் தேற்றுதல் யார்க்கும் அரிது’ ன்னு நேற்றுதான் பார்த்தோம். அதாங்க, தலைமைக்கு சந்தேகம் வந்து விட்டால் அதை மாற்றுவது கடினம்.


மீள்பார்வைக்காக:


செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகும்

ஆன்ற பெரியார் அகத்து.” --- குறள் 694; அதிகாரம் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்


ஆன்ற பெரியார் அகத்து = தலைமை, பெரியவர்கள் நமது பக்கத்தில் இருந்தால்; செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகும் = பிறரிடம் மெதுவாக பேசுவதும் பிறகு சேர்ந்து சிரிப்பதையும் தவிர்க்கவும்.


மேலும் தவிர்க்க வேண்டிய இரண்டினை அடுத்த குறளில் சொல்கிறார். தலைமைக்கு அருகில் இருப்பவர்கள் ஓராராகவும், தொடராராகவும் இருக்க வேண்டுமாம்.


அது என்ன ஓரார், தொடரார்?

ஓரார் என்றால் ஒட்டு கேட்டல். அதாங்க, தலைமை எதாவது மறைவாக யாரிடமாவது பேசிக் கொண்டு இருந்தால் நம்ம காதை அங்கே வைக்க கூடாது. விலகி இருக்கனும். அவர்கள்தான் ஓரார். அதற்கு அப்புறம், தலைமையிடம், நம் நெருக்கத்தின் காரணமாக, மறைவாக என்ன பேசுனீங்க என்று தொடரக் கூடாதாம். அதான் தொடரார்.


ஒரு சமயம் வரும்போது, தலைமையே, தேவையிருப்பின், நமக்கு அதைச் சொல்லுமாம். அப்போதான் அதை கேட்டுக்கனுமாம்.


எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை

விட்டக்கால் கேட்க மறை.” --- குறள் 695; அதிகாரம் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

எப்பொருளும் = எதுவாக இருப்பினும்; ஓரார் = ஒட்டு கேட்காதவர்(களாகவும்); தொடரார் = அதனை அறிய முற்படாதவர்(களாகவும் இருக்கனும்); மறை = மறைத்த; அப்பொருளை = அந்தச் செய்தியை; விட்டக்கால் கேட்க= தலைமையே அதை ரகசியத்தை சொல்லும்போது கேட்க.


‘மற்று’ வினை மாற்றின் கண் வந்துள்ளது.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




10 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page