top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

ஏரினும் நன்றால் எரு ... குறள் 1038

Updated: Jan 22, 2022

22/01/2022 (331)

ஒரு வீட்டிலே, ஒரு தம்பி பத்தாம் வகுப்பு (10th standard) படித்துக் கொண்டிருக்கிறான். தேர்வு நேரம். அவனின் அம்மா, “தம்பீ! இந்தத் தேர்வு ரொம்ப முக்கியம்ப்பா. இது தான் அடிப்படை, இதை நன்றாக முடிச்சுட்டா வேற எதுவும் தேவை இல்லை தம்பி. ஆகவே, ஒன்றுக்கு நான்கு முறை நல்லாபடிங்க” என்கிறார்.


அதன் பொருள் பத்தாம் வகுப்பு படிச்சுட்டாமட்டும் போதும் என்பது இல்லை. அவன் களைத்துவிடக்கூடாது என்று, முதல் செய்ய வேண்டியதை அழுத்திச் சொல்வதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.


உழவு அதிகாரத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவர் முனைவர்(PhD) பட்ட ஆராய்ச்சியே செய்யலாம். அவ்வளவு செய்திகள் இருக்கு.


நெற்பயிர் செய்யனும் என்றால் பல படிகள் இருக்காம். அவையாவன: 1) உழுதல், 2)சமன் செய்தல், 3) விதைத்தல், 4) மீண்டும் நடுதல் 5) நீர்பாய்ச்சுதல், 6) எருவிடுதல், 7) களையெடுத்தல், 8) பாதுகாத்தல், 9)அறுவடை, 10) சுத்தம் செய்தல். அப்பப்பா இவ்வளவா? ன்னு கேட்பாங்கன்னு இதை ஐந்தாகச் சுருக்கி விட்டார் நம் பேராசான். ரொம்ப ஈசி(easy)யாக்கிட்டார்! “உழுதல், எரு, களை, நீர், பாதுகாப்பு என்று ஐந்துதான், நான் பத்து எல்லாம் சொல்லலை தம்பி” என்று சுலபமாக்கிட்டார்.


நம் பேராசான், தாயினும் சாலப் பரிந்து சொல்வதுபோல் முதலில் நன்றாக உழுதுடுங்க என்பதை எடுத்துச் சொன்னார். அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு, கல்லூரி, கல்யாணம் முடித்து கட்டிக் காப்பதுவரை சொல்லப் போகிறார். என்ன ஒரு சுட்டித்தனம். அடிச்சுக்கவே முடியாது நம் ஆசானை.


அடுத்தக் குறளில், மெதுவாக அழைத்துச் செல்கிறார். என்ன தம்பி நன்றாக உழுதிட்டீங்க. நன்று, ஆனால், அதைவிட ரொம்ப முக்கியம் உழுத நிலத்திற்கு தேவையான எரு போடனும், களையெடுக்கனும், நீர் விடனும், விட்ட நீரைக் காப்பற்றனும்ம்ம்…


குறளைப் பார்ப்போம்:


ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு.” --- குறள் 1038; அதிகாரம் – உழவு


ஏரினும் நன்றால் எருவிடுதல் = உழுவதை விட எரு அவசியம்; கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு = களை எடுத்துட்டு நீர் பாய்ச்சனும்; அதைவிட காக்க வேண்டும்; கட்டபின் = களைகளை cut பண்ணபின்


அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி கல்லூரிவரை எடுத்துச் சென்றுவிட்டார். மேல என்ன சொல்லப் போகிறார் என்று நாளை பார்க்கலாம் என்றார் என் ஆசிரியர்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




18 views0 comments

Comments


bottom of page