top of page
Search

கெடாஅ வழிவந்த, விழையார் விழைய 809,810

02/01/2022 (311)

பழைமையைப் போற்றுவாரை, அதாவது நீண்ட நாளைய நட்பை உரிமையோடு போற்றுவாரை, உலகமே நட்பாக்க விரும்புமாம்.


அவர் நமக்கு நண்பராகனும் என்று நினைக்குமாம்.


அப்போ, சுலபமாக நமக்கு நிறைய friends request (நண்பராக வேண்டுகோள்) வரவேண்டுமென்றால் செய்ய வேண்டியது பழைமை பாராட்டுவதுதான்.


அதற்கும் மேல, பகைவர்ளே கூட அவர்கூட நட்பாவது விரும்பத்தக்கதுன்னு நினைப்பாங்களாம்.


பழைமைன்னா என்னன்னு தெரிந்து கடைபிடித்தால் வரும் பயன்களை கடைசி இரண்டு குறள்களில் (809, 810) தெளிவாக்குகிறார் நம் வள்ளுவப் பெருந்தகை.


கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை

விடாஅர் விழையும் உலகு.” --- குறள் 809; அதிகாரம் – பழைமை


கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை= நட்பு கெடாது, பழைமை வழி நிற்கும் நட்புள்ளம் கொண்டவர்களின் வழிவந்த நட்பை; விடாஅர் = யாரும் விட மாட்டார்கள்; உலகு விழையும் = அதனை உலகோரும் விரும்புவர்.


உலகமே அந்த நட்பைத் திரும்பிப் பார்க்குமாம். அது போல ஒரு நட்பு நமக்கு கிடைக்காதா என்று ஏங்குமாம்.


சரி அது மட்டுமா என்றால் இல்லையாம்!


விழையார் விழையப் படுப பழையார்கண்

பண்பின் தலைப்பிரியா தார்.” --- குறள் 810; அதிகாரம் – பழைமை


பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார் = பழைமையைப் போற்றி நட்போடு பிரியாமல் இருப்பவர்களை; விழையார் = பகைவர்கள்; விழையார் விழையப் படுப = பகைவர்களாலும் விரும்பப் படுவார்களாம், நட்பாக முயல்வார்களாம்.


இதைத்தான் ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ ன்னு சொறாங்க போல!


பழைமையைப் போற்றுவோம்,


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.






13 views0 comments
Post: Blog2_Post
bottom of page