குணனும் குடிமையும் ... குறள்கள் 793, 504
Updated: Dec 14, 2021
14/12/2021 (294)
குற்றமில்லாதவன் இருப்பானா? அது சாத்தியம் இல்லை. அப்போ. நட்பை வளர்க்க முடியாதா?
நாம் ஏற்கனவேப் பார்த்த குறள்தான். தெரிந்து தெளிதல் ( 51 ஆவது) அதிகாரத்தில் நான்காவது குறள் (27/04/2021 (100) காண்க)
நட்பு கொள்ள வேண்டும் என்றால் பார்க்க வேண்டிய நான்கு எதுன்னு சொல்கிறார் குறள் 793ல்.
குணத்தைப் பார்க்கனுமாம் முதலில். பிறகு குடிமையைப் பார்க்கனும், குற்றத்தைப் பார்க்கனும், குன்றா இனத்தைப் பார்கனுமாம் நட்பு கொள்ள வேண்டும் என்றால்!
“குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்துயாக்க நட்பு.” --- குறள் 793; அதிகாரம் – நட்பாராய்தல்
குணம் என்றால் ஒரளவுக்குப் புரியுது. குடிமை என்றால் என்னவென்று குறள் 133ல் சொன்னதைப் பார்த்தோம் (06/09/2021 (195) காண்க). ஒழுக்கம் உடையது குடிமை என்று சொல்லியிருக்கிறார்.
குற்றமில்லாதவர்கள் யாரும் இல்லை என்பதால் எந்த அளவுக்கு அதன் இயல்புகள் இருக்கு என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ‘குன்றா இனனும்’ என்கிறார். இது என்னவென்றால் நாம் இப்போது சொல்கிறோமே second level connection என்று அதுபோல, அதாவது அடுத்த வட்டத்து தொடர்பைக் கூட ஆராயனுமாம்.
யாரு சார் இதெல்லாம் பார்க்கிறார்கள். நடக்கிற காரியமா என்றால் நடக்கிறது என்பதுதான் பதில்.
இப்போ, இந்த HR (human resources) என்கிறார்களே, அதாவது மனிதவள மேலான்மையில் இருப்பவர்கள் பார்ப்பதே இதுதான். ஒருவரை ஒரு பணிக்கு அமர்த்தும் முன்பு இந்த நான்கையும் ஆராய்ந்துதான் செய்கிறார்கள். நட்பாராய்தல் என்பது அவர்களைப் பொறுத்த வரையில் ஒருவரின் தொடர்புகளை ஆராய்வதுதான். அப்புறம்தான் உள்ளே விடுவார்கள்.
நல்ல பணிக்கு போகனுமா? அப்போ இந்த profile (சுய விவரம்) வேணும்.
வள்ளுவப் பெருமான் அந்தக் காலத்திலேயே அழகாக வகுத்து வைத்திருக்கிறார். எதிலிருந்து ஆரம்பிக்கனும், எப்படி தொடருனும் என்பதையும் வரிசை முறையில் குறிக்கிறார். ரொம்பவே சுட்டி அவர்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
