24/06/2022 (483)
அந்தக் காலத்திலே internet (இன்டெர்னெட்) ன்னு ஒன்று இல்லை, இருந்திருந்தா “INTERNETபயன்படுத்தாமை”ன்னு ஒரு அதிகாரம் எழுதியிருப்பார். இதன் போதை சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை இப்போது பரவியிருக்கு.
நாட்களை, பயன் உள்ள நாட்களாக மாற்றனும் என்றால் 8-8-8 என்ற விதியைப் பயன்படுத்தனும்ன்னு சொல்றாங்க. அது என்ன 8-8-8? எட்டு மணி நேரம் வேலை – எட்டு மணி நேரம் சுய முன்னேற்றம்/ சுற்றத்திற்காக – எட்டு மணி நேரம் ஓய்வு/உறக்கம்.
ஆனால், சமீபத்தில் செய்த ஆய்வில் என்ன தெரியவந்தது என்றால், இன்றைய இந்திய இளையத் தலைமுறை (Gen -Z) சராசரியாக இன்டெர்னெட்டில் செலவழிக்கும் நேரம் 8 மணி நேரமாம்!
அதிலே, whatsapp, youtube தான் அதிக நேரம்ன்னு சொல்லத் தேவையில்லை! அந்த internet ஐப் பயன் படுத்தி ராக்கெட்டும் விடலாம், இல்லை memes (மீம்ஸைப்) பார்த்து பொழுதையும் கழிக்கலாம்.
இதுவும் ஒரு வகையிலே சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொள்வது போலத்தான்.
2010ல் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) Apple IPAD வெளியிடும்போது, அதன் பயன்களையெல்லாம் பட்டியலிட்டுட்டு, இது, சுருக்கமாகச் சொன்னா குழந்தைகள் கல்விகற்க எல்லாவகையிலும் பயன்தரும் என்று முடித்தார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து, அதாவது 2012ல் அவரிடம் ஒரு நிருபர் கேட்டார்: “உங்க குழந்தைகள் எல்லாம் IPADஐ ரொம்பவே விரும்புகிறார்களா?”
(ஸ்டீவ் ஜாப்ஸ்- க்கு மொத்தம் நான்கு குழந்தைகள் லிசா உட்பட. அது என்ன லிசா உட்பட என்கிறீர்களா? அது ஒரு பெரிய கதை. அதைப் பற்றி அப்புறம் பார்க்கலாம்)
அந்தக் கேள்விக்கு வருவோம், கேள்விக்கு அவரின் பதில்: “எங்க வீட்டிலே குழந்தைகளுக்கு IPADஐ கண்ணிலேயே காட்டுவதில்லை” என்றார்! அது ரொம்பவே குழந்தைகளைக் கெடுக்கிறது என்றார்!
நம்ம குழந்தைகளுக்கு எல்லாம் தெரியும். ஆனால், எதுவும் செய்யத்தெரியாது என்ற ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு நாள் கூகுளாண்டவன் (google – the god) இல்லை என்றால் நினைத்துப் பார்க்கவே முடியலை.
“கையறியாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறியாமை கொளல்.” --- குறள் 925; அதிகாரம் - கள்ளுண்ணாமை
நேற்றைய குறளேதான். மீண்டும் ஒரு முறை படிப்போம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comentários