குறள்கள் 100, 200, 300, 291, 645
Updated: Nov 15, 2021
15/11/2021 (265) – (23/06/2021 (121) மீள்பதிவு)
திருக்குறள் முழுவதும் ‘வாக்கு’ இருக்குன்னு நமக்கு விளங்குது.
ரொம்ப நாளைக்கு முன்னாடி சில குறள்களைத் தொகுப்பாக பார்த்தோம். அதாவது குறள்கள் 100, 200, 300, 291, 645. மீள்பார்வைக்காக மீண்டும்:
சொற்கள்:
1. இனிமையாக இருத்தல் வேண்டும்: - 100 (சொடுக்க) வது குறள்
“இனியஉளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.”
2. பயன் பயத்தல் வேண்டும்: - 200 (சொடுக்க) வது குறள்
“சொல்லுகசொல்லின் பயனுடைய சொல்லற்க சொல்லின் பயனிலாச் சொல்.”
3. அச் சொற்களில் தீங்கு இலாத உண்மை வேண்டும்: - 300, 291 (சொடுக்க) குறள்கள்
“யாம்மெய்யாக்கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.” --- 300
“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.” --- 291
4. அச் சொற்களும் வெல்லும் சொற்களாக இருத்தல் வேண்டும்:- 645 (சொடுக்க) வது குறள்
“சொல்லுக சொல்லைப்பிறிதோர்சொல்அச்சொல்லை வெல்லும்சொல்இன்மைஅறிந்து” --- 645
(மேற்கண்ட குறள்களின் விரிவைப் படிக்காதவர்கள் அதை தேடிப் படிப்பீர்களாக!)
புறம்கூறாமைக்கு(19) அடுத்த அதிகாரம் பயனிலசொல்லாமை (20).
தமிழில் ‘நயம்’ (இதன் போலி நயன்) என்று ஒரு சொல் இருக்கிறது. அதற்கு பல பொருள்கள். ‘நயம் புளி’ என்றால் தரமான புளி. ‘செய்யுளின் நயம்’ என்றால் செய்யுளின் அழகு/மேன்மை. ‘நயந்து பேசுவது’ என்றால் மனம் மயங்குமாறு பேசுவது. நயமாக நடந்துகொள்வது என்றால் நடுவுநிலைமை தவறாமல் இனியமையாக நடந்துகொள்வது. திருக்குறளில் பல இடங்களில் இந்தச் சொல் வருகிறது. அதிலே ஒன்று:
“நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.” --- குறள் 197; அதிகாரம் - பயனில சொல்லாமை
நயனில = இனிமையற்ற
பொருள்: சான்றோர்கள் (ஒரு வேளை) இனிமையற்ற வார்த்தைகளைப் பேசினாலும் பேசலாம் ஆனால் பயனற்ற வார்த்தைகளை கொஞ்சமும் பேசாமை நல்லது.
தொடர்ந்து பேசுவோம் பயனுடையவைகளை.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
