top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

குறிப்பின் குறிப்புணரா ... குறள் 705

26/10/2021 (245)

நாம கண்ணாலே பார்க்கிறோம்.


நம்மாளு: அது யாருக்கு தெரியாது? எல்லாரும் கண்ணாலேதான் பார்க்கிறாங்க?


கண்ணாலே மட்டும்தான் பார்கிறோமா? அதான் கேள்வி.


நம்மாளு: புரியலையே?


சரி, இரவு நேரம். மின்சாரம் போயிடுது. இருட்டா இருக்கு. அந்த மெழுகு வர்த்தியையோ இல்லை தீப்பெட்டியையோ எடுக்கனும். எல்லாரும் தவிக்கறாங்க. நீங்க என்ன பண்ணறீங்க, கொஞ்சம் பொறுங்க நான் எடுக்கிறேன் என்று மெதுவா போய் தேடறீங்க. கிடைச்சுடுச்சு. தீப்பெட்டியை கண்டு பிடிச்சுட்டேன்னு சத்தமாக எல்லாருக்கும் சொல்வீர்கள் இல்லையா?


நீங்க அப்போ தீப்பெட்டியை கண்டீர்களா? கையும் மனசும் இணைந்துதானே அதைப் பார்த்தது. கண் பார்க்கும் வேலையை கை செய்தது.


சரி. இன்னொரு உதாரணம். ஏதோ ஒரு யோசனையிலே உட்கார்ந்து இருக்கீங்க. உங்க எதிரிலே உங்க நண்பர் வராரு. நீங்க கவனிக்கலை. அதாவது உங்க கண் அவரைப் பார்க்கலை! இது உங்களுக்கும் நடந்து இருக்கும் தானே?


மேலுமொரு உதாரணம். கணவிலே இதைப் பார்த்தேன், அதைப் பார்த்தேன்னு சொல்றீங்க கண்ணா பார்த்தது? இல்லையே.


கண் பார்ப்பது இல்லை. நம்ம உள்ள இருக்க ஏதோ ஓன்றுதான் கண் மூலமாகவும், கை மூலமாகவும், மற்ற உறுப்புகள் மூலமாகவும் பார்க்குது. இதுதான் மிக நுட்பமான் செய்தி. இதை தன்மாத்திரைகள் என்று சொல்கிறார்கள். பிறகு விரிப்போம் என்று ஆசிரியர் குறளைத் தொடரச் சொன்னார். இதோ வந்துவிட்டேன் குறளுக்கு.


குறிப்பறிதல் 71 ஆவது அதிகாரத்தின் முதல் மூன்று குறள்களில் சிறப்பைக் கூறியவர் அடுத்த இரண்டு குறள்களின் வழி குறிப்பறிதல் இல்லை என்றால் எவ்வளவு மோசம் என்று சொல்கிறார். நேற்று பார்த்த குறளில் குறிப்பறிதல் இல்லை என்றால் மனுசனே இல்லைன்னு சொன்னார்.


இப்போ பார்க்கப் போகும் குறளில் குறிப்பறிதல் இல்லை என்றால் ‘கண் இருந்தும் கபோதி’ என்கிறார். அவ்வளவு மோசமாகவா சொல்லியிருக்காரு?

ஆமாங்க.நீங்களே பாருங்க.


குறிப்பின் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்

என்ன பயத்தவோ கண்.” --- குறள் 705; அதிகாரம் – குறிப்பறிதல்


குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் = குறிப்பைக் காணும் திறமை இருந்தும் அந்தக் குறிப்பை கண்டுக்கவில்லையென்றால்; உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ = உறுப்புகளுள் (நான் தான் பார்க்கிறேன், நான் தான் பார்க்கிறேன் அன்று தம்பட்டம் அடிக்கும்) சிறந்ததாகிய கண்ணாலே என்ன பிரயோசனம்.


அதாவது, போதி என்றால் அறிவு, காண்பது. கபோதி என்றால் அறிவிலி. அதாங்க, குறிப்பை பிடிக்கலைன்னா அதான். நான் சொல்ல மாட்டேன். நீங்களே குறிப்பை பிடிங்க.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




5 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page