top of page
Search

செயற்கரிய நிறைநீர நீரவர் கேண்மை ... 781,782

05/12/2021 (285)

நட்பு என்பது ரொம்ப பெரிய சமாச்சாரம்ன்னு நினைத்த நம்ம வள்ளுவப் பெருந்தகை, அதற்கு மட்டுமே ஐந்து அதிகாரங்களை வைத்துள்ளார்.

நட்பு (79), நட்பாராய்தல் (80), பழைமை (81), தீநட்பு (82), மற்றும் கூடாநட்பு (83) ஆகிய அதிகாரங்கள் நட்பை விளக்குகின்றன.


நட்பு என்றால் என்னவென்று நட்பு அதிகாரத்திலும், அந்த நட்பையையும் ஆராய்ந்தே நட்பு கொள்ள வேண்டும் என்று நட்பாராய்தலிலும், நட்ட பின் அது வளரும் அப்போது சில குறைகள் இருக்கும் அதையும் பொறுக்கனும் என்று பழைமை அதிகாரம், பொறுக்க முடியாத இரண்டு: தீநட்பு, கூடாநட்பு என்று மேலும் இரண்டு அதிகாரங்கள் – இப்படி முறைப்படுத்தி உள்ளார்.


‘உன் நண்பனைக் காட்டு, உன்னைப் பற்றி சொல்கிறேன்’ என்கிறார்களே அதை நாம கவனிக்கனும். நம்முடையச் செயல்கள் பலவற்றை நமது நட்பு தீர்மானிக்கிறது. நமது வெற்றி, தோல்விகளுக்கும் அது காரணமாக இருக்கிறது. ஒரு தலைமைக்கு நட்பு ரொம்பவே முக்கியம். அந்த நட்புகள் வட்டம் மட்டும் சரியாக அமைக்கத் தெரிந்து விட்டால் நாம பெரிய கில்லாடிதான். அது நாம செய்யப்போகும் செயல்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையமாக இருக்கும்.


நல்ல நட்பை நட (நாட) வேண்டும் என்கிறார் நம் பேராசான் குறள் 781ல்.


செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.” --- குறள் 781; அதிகாரம் – நட்பு


நட்பின் செயற்கு அரிய யா உள = நம்ம சமுக வளர்ச்சிக்கும் நம்ம வளர்ச்சிக்கும் நாம செய்ய வேண்டியதில் சிறந்த செயல் எது என்று கேட்டால் நட்பு போல ஒரு அரிய செயல் எங்கே இருக்கு? (நட்பு ரொம்ப முக்கியம்); அது போல் வினைக்கரிய யா உள காப்பு = அது போலப் பகைவர்கள் செய்யும் சூழ்ச்சிகளுக்கு நமது நட்புகள் போல ஒரு காவல் இல்லை


நட்பு வட்டத்தைப் பார்த்தே பகைவர்கள் பின் வாங்க்குவார்கள். அதனால், அவர்கள் நமக்கு எதிராக செய்ய நினைப்பதைத் தவிர்ப்பார்கள் என்கிறார்.


இரண்டு வகையா நட்பு கூடுமாம். ஒன்று நீரவர் நட்பு, மற்றொன்று பேதையார் நட்பு என்று எடுத்துச் சொல்லுகிறார்.


நீரவர் என்றால் நல்ல தன்மை உடையவர். அந்த மாதிரி நட்பு நம்மை வளர்பிறைச் சந்திரன் போல பெருக்குமாம்; பேதையார் நட்பு நம்மை தேய் பிறைச் சந்திரன் போல சுருக்குமாம்.


நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்நீர பேதையார் நட்பு.” --- குறள் 782; அதிகாரம் – நட்பு


நீரவர் கேண்மை பிறை நிறை நீர = நல்லவர்களின் நட்பு பிறை வளர்வதைப் போன்றது; பேதையார் நட்பு மதிப் பின் நீர = பேதைகளின் நட்பு, அந்த முழு மதி எப்படித் தேய்கிறதோ, அது போல நாம நல்லதொரு நிலையில் இருந்தாலும் அதை இறக்கிவிடும் தன்மை உடையதாம்


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.





39 views2 comments
Post: Blog2_Post
bottom of page