செயற்பால தோரும் ... 40, 22/02/2021
- Mathivanan Dakshinamoorthi
- Feb 22, 2021
- 1 min read
22/02/2021 (36)
நன்றி, மகிழ்ச்சி, வாழ்த்துகள்
நாம் தொடர்ந்து ‘அறன் வலியுறுத்தல்’ங்கிற அதிகாரத்தில் இருந்து பல குறள்களை பார்த்தோம்.
மனத்துக்கண் பொறாமை, பேராசை, கோவம் அதனாலே உண்டாகும் கடுஞ்சொல் ஆகியவைகளை தவிர்க்க ‘அறம்’ பெருகும். அந்த அறத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செய்வதுதான் மென்மேலும் உயர்வதற்கு வழின்னும், அதுவே தான் அமைதியா இந்த உலகத்தை விட்டு போகும் ‘வீடுப்பேற்றை’ யும் கொடுக்கும்ன்னு பார்த்தோம்.
இதெல்லாம் சொன்ன வள்ளுவப்பெருந்தகைக்கு இன்னும் சொல்லணும்னு தோணி மேலும் சில குறள்களை சொல்றார்.
அவருக்கு மனசு ஆறலை. சரியா சொல்லிட்டோமான்னு ஒரு சந்தேகம் வந்திருக்கும் போல. அதனாலேசெய்வதெல்லாம் அறமாகஇருக்கணும், தள்ளப் போட வேண்டியது, தவிர்க்க வேண்டியது ‘பழி’ என்னும் அறமல்லாதவையே.
அறத்தை தள்ளினா பழி தான் வரும்ன்னு முடிவாக 40 வது குறளில் சொல்கிறார் இப்படி:
“செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. “ ---குறள் 40
செயற்பால = செய்வதெல்லாம்; உயற்பால =ஒழிக்க வேண்டிய தன்மையுடையது; உயல் = ஒழித்தல், தள்ளிப்போடுவது; பால = தன்மையுடைய; ஓரும் –அசை நிலை - பொருள் கிடையாது; உயலுவது = முயலுவது
நம்மாளு: (மைண்ட் வாய்ஸ்: அதான், சும்மா சுத்தினுகிறவனுங்க ‘உயன்டுகினுகிறேன்’ ன்னு சொல்றாங்க போல!) ம்ம்…
மேலும் சில குறள்கள் இந்த அதிகாரத்திலே இருக்கு. அதெல்லாம் கொஞ்சம் விவகாரமான குறள்களா இருக்கு.
அவங்க, அவங்க நம்பிக்கைகளுக்கு ஏற்றாற் போல பொருள் எடுத்துக்கலாம்.
அதனையும் வரும் நாள்களில் பார்க்கலாம்!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன்,
உங்கள் அன்பு மதிவாணன்.

Commenti