top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

தம்மின் பெரியார் ... குறள் 444

31/03/2022 (398)

444 என்ற எண் ஒரு குறிப்பிடத்தக்க சிறந்த எண் என்கிறார்கள் எண்களை ஆராய்பவர்கள். 4 என்ற எண் சீன மொழியில் se(i) என்று உச்சரிக்கிறார்கள். இந்த உச்சரிப்புக்கு மற்ற பொருள் ‘செழுமை’, ‘பணம்’மாம்.


தட்டச்சுப் பலகை, கணினி விசைப் பலகைகளில் கவனித்தீர்கள் என்றால் 4 என்ற எண்ணுக்கு $ என்ற குறி ஒதுக்கப்பட்டிருக்கும். 444 என்றால் $$$. நிறைய செல்வச் செழிப்பினைக் குறிக்கிறதாம்.


444 உங்கள் கண்களுக்கு அடிக்கடி தெரிந்தால் நீங்கள் செல்லும் பாதையில் உங்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்று பொருள் சொல்கிறார்கள்.

மூன்று தொடர் எண்கள் (111,222,333,444...) தேவதைகளின் எண்கள் என்கிறார்கள். இந்தப் பிரபஞ்சம் பல விதமாக நம்மைத் தொடர்பு கொள்கிறதாம்.


இது எல்லாம் என்ன பகுத்தறிவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதா? என்ற கேள்வி எழலாம். அறிவே முன் கிடைத்த அனுபவங்கள் (experiences) ஆராயப்பட்டு (experiments) தொகுப்படுவதுதானே. இன்னும் பல அனுபவங்களை ஆராயவல்ல கருவிகள் இல்லை என்பதை எல்லாரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

பால் வெளி மண்டலங்கள் (milky way galaxies) அறிவியல் உலகம் கண்டு உறுதி செய்தது 1610ல். Telescope (தொலை நோக்கி) என்ற சாதனம் கண்டு பிடிக்கப்பட்ட பின்புதான்.


அதுவரை பால்வெளி இல்லாமல் இருந்ததா என்ன?


ஆனால், இந்தப் பால்வெளியைக் குறித்து மட்டுமல்ல அது எவ்வாறு நகர்கின்றது என்பதையும் கண்டு எழுதியுள்ள குறிப்புகள் தமிழ் இலக்கியங்களிலே இருக்கின்றன. அதனை ஆராய்ந்து கொண்டு இருப்பவர்கள் அமெரிக்கர்களும், ஜெர்மானியர்களும், பிரெஞ்ச் அறிவியலாளர்கள்தான்.


1885ல் வெளிவந்த Occult Science (Henry Steel Olcott, Theosophical Soceity, Chennai) என்ற புத்தகத்தில் அனுவினைப் பகுத்தால் அதன் உள்ளே என்ன இருக்கும் என்று மனக்காட்சியாலேயே கண்டு விவரித்திருந்தார்கள். இதனை 1984ல் பல கோடிகள் செலவு செய்து (Large Hadron Collider) விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். இன்னும் ஆராய்ச்சியைத் தொடர்கிறார்கள். அதில் பங்கு பெற்ற ஒரு விஞ்ஞானி இந்தப் புத்தகத்தை பிரிட்டனில் உள்ள நூலகத்தில் பார்த்து வியந்ததாக குறிப்பு எழுதியுள்ளார்.


ஆசிரியர் மேலும் தொடர்ந்தார். காலத்தின் அருமை கருதி இன்னொரு சமயம் தொடர்கிறேன்.


குறிப்பு: பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி. இது நிற்க, குறளுக்கு வருவோம்.


தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையுள் எல்லாம் தலை.” --- குறள் 444; அதிகாரம் – பெரியாரைத் துணைக்கோடல்


நமக்கு வலிமை சேர்பவைகளுள் தலைசிறந்தது எது என்று கேட்டால் நம்மைவிட பெரியவர்களைப் போற்றிப் பணிந்து நம் அருகில் வைத்துக் கொள்வதுதான்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)







9 views1 comment

1 Comment


Unknown member
Mar 31, 2022

Very True. Spirituality encompasses the Science. Science just pushing the wall a step.but wall remains .கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு”.Science makes the basic assumption that laws of nature remains the same

Like
bottom of page