top of page
Search

தொடங்கற்க ... 491

21/11/2022 (627)

யானையாரையும் முதலையாரையும் இடனறிதல் அதிகாரத்தில் ஒரு ஆர்வத்தை தூண்டும் வகையில் teaser (விளம்பரம்) ஆகப் பார்த்தோம்.


இடனறிதல் அதிகாரத்தின் முதல் குறளில் என்ன சொல்கிறார் என்றால் களம் சரியாக இல்லை என்றால் எந்தக் காரணத்தைக் கொண்டும் உன் ஆட்டத்தை தொடங்கிவிடாதே; அதுவரை பகையை, போட்டியாளரைக் குறித்து வாயைத் திறக்காதே; குறிப்பாக குறைத்து மதிப்பிடாதே! அதாவது மிக கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்.


தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடம்கண்ட பின் அல்லது.” --- குறள் 491; அதிகாரம் – இடனறிதல்


முற்றும் = முற்றுகை; முற்றும் இடம்கண்ட பின் அல்லது = பகையை சூழ்ந்து தாக்கும் இடம் இதுதான் என்று காணும் வரை; எள்ளற்க = அந்தப் பகையை இழித்துப் பேசாதே; எவ்வினையும் தொடங்கற்க = அந்தப் பகையைத் தாக்கும் எந்த வேலையையும் தொடங்காதே.


பகையை சூழ்ந்து தாக்கும் இடம் இதுதான் என்று காணும் வரை அந்தப் பகையை இழித்துப் பேசாதே; அந்தப் பகையைத் தாக்க எந்த முனைப்பையும் காட்டாதே.


சரி, அதுவரை நாம் என்ன செய்ய வேண்டும்?


பதிலை அடுத்தக் குறளில் வைத்துள்ளார். நாளை பார்க்கலாம்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்




Comments


Post: Blog2_Post
bottom of page