top of page
Search

நகுதற் பொருட்டன்று நட்டல் ... குறள் 784

07/12/2021 (287)

நட்பின் பயன் என்ன? என்ற கேள்விக்கு பதிலாக நான்காவது (784) குறளை அமைத்துள்ளார்.


நாம ஏற்கனவே ஒரு குறளைப் பார்த்தோம். அதாவது, உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களையவேண்டும் என்று சொல்லியிருந்தார் குறள் 788ல்.


இடுக்கண் வந்துவிட்டால் ஓடிப் போய் உதவி செய்ய வேண்டும் என்றும், அதுவும் அனிச்சைச் செயலாக இருக்க வேண்டும் என்றும் எடுத்துச் சொன்னார். இது வந்தபின் காப்பது.


குறள் 784ல் வருமுன் காப்பதைச் சொல்கிறார். அதாவது, பழியும், பாவமும் தரும் செயல்களைச் செய்தால் துன்பம் நிச்சயம்ன்னு தெரியும். அது போன்ற செயல்களில் நண்பன் ஈடுபடும் போது எடுத்துச் சொல்லனுமாம். எடுத்துச் சொன்னா நிறையப் பேர் கேட்கமாட்டாங்க, அது வேலைக்கு ஆகாது என்று தெரிந்த நம் பேராசான் சொல்கிறார் ‘இடித்துச் சொல்லுங்க’ ன்னு இடிக்கிறார்.


அதையும் முன்கூட்டியே போய் இடித்துச் சொல்லனுமாம்.


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு.” --- குறள் 784; அதிகாரம் – நட்பு


நட்டல் நகுதற் பொருட்டன்று = சும்மா சிரித்துப் பேச மட்டுமல்ல நட்பு; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு = ஒரு தீயச் செயலை செய்ய எண்ணும்போதே அதைத் தடுக்கும் வகையிலே இடித்துச் சொல்லி திருத்துவதுதான் நட்பு


நம்மாளு: நமக்கு ஏன் ஸார் வம்பு. கொஞ்ச நேரம் பார்த்து பேசறோம். அது, அது அவங்க அவங்க பிரச்சனை. போனோமா, கொஞ்ச நேரம் தமாஷாப் பேசனோமான்னு வந்துட்டே இருக்கனும். ரொம்ப தலையை விட்டா நமக்குத்தான் ஸார் அசிங்கம். இடித்துச் சொல்லனும்ன்னு வள்ளுவப் பெருமான் சொல்றதெல்லாம் வேலைக்கு ஆகுமா? இப்பல்லாம் இது என் தனிப்பட்ட விஷயம் (personal matter) தலையை விடாதேன்னு முன் கூட்டியே அவங்க நமக்கு சொல்லிடறாங்க. இதிலே போய் …


ஆசிரியர்: தம்பி, நீ சொல்வதும் சரிதான். உலகமே அப்படித்தான் போகுது. தூக்கணாங்குருவி கதையை நாம ஏற்கனவே பார்த்தோம். ஆனால், தம்பி, அதை நட்பிலேயே சேர்க்க கூடாது. உன்னோட கேள்விக்குப் பதிலாகத்தான் நம் பேராசான் அடுத்த குறளை வைத்துள்ளார். நாளைக்குப் பார்க்கலாம். – என்று சொல்லிவிட்டு ஆசிரியர் சென்று விட்டார்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




15 views1 comment
Post: Blog2_Post
bottom of page