top of page
Search

நட்பிற்கு உறுப்பு ... 700, 1302, 802

23/12/2021 (303)

மன்னரைச் சேர்ந்து ஒழுகல் என்று ஒரு அதிகாரம் (70ஆவது), அந்த அதிகாரத்தில் தலைமையிடம் நெருங்க்கும் போது எப்படி இருக்க வெண்டும் என்று கூறுகிறார். அதில் கடைசிக் குறளில் என்ன சொல்கிறார் என்றால், நாமதான் ரொம்ப பழகிட்டோம்ன்னு, உரிமையை எடுத்துக்கிட்டு, பண்பல்லது செய்யக் கூடாதாம். செய்தால் அது நமக்கு கேடு தரும் என் கிறார்.


பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்

கெழுதகைமை கேடு தரும்.” --- குறள் 700; அதிகாரம் – மன்னரைச் சேர்ந்தொழுகல்


பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை = தலைவனுக்கு நாம் பழையம் (ரொம்ப காலமாக கூட இருக்கோம், உரிமை இருக்கு) என்று கருதிக்கொண்டு, இப்படி, அப்படின்னு நாம் நினைக்கிறார் போல வேண்டாதச் செயல்களைச் செய்யக்கூடாது; கேடு தரும் = அப்படிச் செய்தால் அது கேட்டினை விளைவிக்கும்.


நான் உப்பிற்கு ஒரு சுவை என்றுதான் நினைத்துக் கொண்டுஇருந்தேன். உப்பின் சுவை உவர்ப்பு – இது பொதுப் பண்பு. இதன் சிறப்புப் பண்பு சுவைகளைக் கூட்டுதல். எப்படி பஞ்சபூதங்களில் ஆகாயம் அனைத்து பூதங்களையும் உள்ளடக்கியிருக்கிறதோ அது போல உப்பும் அனைத்துச் சுவைகளையும் உள்ளடக்கியிருக்கிறது. நாம் உள்ளே அனுப்பும் அனைத்தும் கடைசியில் உப்பாகத்தான் மாறுகிறது. அனைத்து பொருட்களிலும் உப்பு இருக்கிறது. சாப்பிடும் சுவையைக் கூட்டதான் சிறிதளவு உப்பு சேர்க்கிறோம். எனவே, உப்பு ஒரு taste enhancer (சுவைக் கூட்டி). அதை அதிகமாகப் போட்டால் வாயில் வைக்க முடியாது.


காமத்துப் பாலில் ஒரு குறள். அதில் நம் பேராசான் சொல்வது என்னவென்றால்.


காதலர் இருவரிடையே ஏற்படும் ஊடல்கூட உப்பைப் போல் சிறிதளவுதான் இருக்க வேண்டுமாம். அது சிறிது அதிகம் (ரொம்பதான் ஓவரா போயிட்டு இருக்கோமோ) என்று அறிந்தவுடனே அதை தவிர்த்துவிட்டு ஆக வேண்டிய வழியைப் பார்க்கனும்


உப்பமைந்தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்.” --- குறள் 1302; அதிகாரம் – புலவி


பழைமைக்கு இலக்கணமும் அதே! நீண்ட நாளைய நட்பின் சிறப்பே உரிமை எடுத்துக் கொள்வதுதானாம். இந்த உரிமையைச் ‘சுவை’ என்று கொண்டால், அது உப்பைப் போன்று சிறிதளவுதான் இருக்கனுமாம்.


நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு

உப்பாதல் சான்றோர் கடன்.” --- குறள் 802; அதிகாரம் - பழைமை


உறுப்பு = ஒரு பண்பு; கெழுதகைமை = உரிமை; சான்றோர் = நல்ல நண்பர்கள்


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.





18 views6 comments
Post: Blog2_Post
bottom of page