top of page
Search

நீங்கின் தெறூஉம் ... 1104

08/09/2022 (558)

அவன்: நெருங்கினால் குளிரும், விலகினால் சுடும் ஒரு தீ இருக்கு தம்பி. அதைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா தம்பி?


நம்மாளு: ஐ, அப்படியா?… எனக்கு எங்கண்ணே அதெல்லாம் தெரியும். நீங்களே சொல்லுங்க. உங்களுக்குத் தெரியுமா?


அவன்: அதை ஏன் கேட்கற தம்பி. இப்போ நான் படறபாடே அந்தத் தீயாலேதான்.


நம்: என்ன அண்ணே ஒரு மார்க்கமா இருக்கு நீங்க சொல்றது?

அவன்: நான் நினைப்பதை அப்படியே வள்ளுவப் பெருமான் சொல்லியிருக்காரு. ஒரு வேளை அவரும் அனுபவிச்சு இருப்பாரோ?


நம்: இல்லாமலும் இருக்கலாம்.


அவன்: எப்படி சொல்ற?


நம்: பின்னே என்ன அண்ணே, கொலை கதை எழுதுகிற கதையாசிரியர் கொலை பண்ணியிருக்கனுமா என்ன? உங்களை மாதிரி ஆளுங்களைப் பார்த்திருப்பாரு. எழுதியிருப்பாரு.

சரி, சரி அந்தக் குறளுக்கு வாங்க.


நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்.” --- குறள் 1104; அதிகாரம் – புணர்ச்சி மகிழ்தல்


அவளை விட்டு நீங்கினால் ரொம்ப சுடுகிறது; அவளை நெருங்கினாலோ குளிர்கிறது; அது போல இருக்கும் ஒரு தீயை எங்கிருந்து பெற்றாள் இவள்?


தெறும் = சுடும்; தெறூஉம் = ரொம்ப சுடுஉஉம்; நீங்கின் தெறூஉம் = அவளை விட்டு நீங்கினால் ரொம்ப சுடுகிறது;


குறுகுங்கால் = நெருங்கினால்; தண்ணென்னும் = குளிர்ச்சியாக இருக்கிறது;

தீ யாண்டுப் பெற்றாள் இவள் = அது போல இருக்கும் ஒரு தீயை எங்கிருந்து பெற்றாள் இவள்?


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்




3 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page