16/03/2022 (383)
திருவிழாக் காலங்களில் ‘கிளுகிளுப்பை’ன்னு ஒரு குழந்தைகள் விளையாட்டுப் பொருள் விற்பார்கள். அதை, இப்படி அப்படி அசைத்தால் நல்ல சத்தம் வரும். அதை பனை ஓலையில் செய்திருப்பார்கள். அழகான வண்ணங்களைப் பூசியிருப்பார்கள். அதற்குள்ளே சின்ன சின்ன சரளைக் கற்களைப் போட்டு வைத்திருப்பார்கள்.
குழந்தைகளுக்கு வித விதமான சத்தம் என்றால், அதுவும் வழக்கத்திற்கு அதிகமாக இருந்தால், சட்டுனு திரும்பி பார்க்கும்.
குழந்தைகள் என்ன நாமகூட அப்படித்தான்!
திருவிழாக்காலங்களில் அந்த கிளுகிளுப்பையைக் காட்டி குழந்தைகளைக் கடத்தி விடுவார்கள்ன்னு சொல்லுவாங்க. கிளுகிளுப்பையைக் காட்டினால் பின்னாடியே போகாதேன்னும் சொல்வங்க.
சரி, இப்போ எதுக்கு இந்தக் கதைன்னு கேட்கறீங்க, அதானே?
அதாங்க நேற்று ஒரு கேள்வியோட முடித்திருந்தோம் அல்லவா? உடலின் புலன்கள் மனசைக் கட்டுப்படுத்தினால் என்ன செய்வதுன்னு முடித்திருந்தோம்.
உடம்பையும் மனசையும் சட்டுன்னு ஒட்ட வைக்கும் திறன் சப்ததிற்கு இருக்கு. அதான் சாமி கும்பிடும் போது மணியடிக்கிறார்கள். திருமணத்தின் போதும் மங்கல ஒலி எழுப்புகிறார்கள்.
இது இருக்கட்டும், பேய் ஓட்டுகிறார்களே அப்போதும் விதவிதமாக ஓலி எழுப்புவார்கள். இது எல்லாமே, மனசையும் உடம்பையும் இணைக்கும்.
பாட்டு கேட்டால் பலருக்கு மனசு லேசானாப் போல இருக்கும். அது எந்தப் பாட்டாக இருந்தாலும் பரவாயில்லை.
நூலறுந்தப் பட்டம் போல நம்ம மனசோ, உடம்போ போக ஆரம்பிக்குதா உடனே நீங்களே கூட ஒரு சத்தத்தைப் போடலாம். ஒரு பாட்டு பாடலாம். உடனே இரண்டும் ஒரு நிலைக்கு வரும்.
அதனாலேதான் மனம் பிறழ்ந்து போனவங்க சில சமயம் அவர்களை அறியாமலே சத்தத்தை எழுப்புவாங்க.
ஒரு பழக்கத்தை மாற்றனும் என்றால் இன்னொன்றை இட்டு நிரப்பனும்ன்னு வல்லுனர்கள் சொல்றாங்க.
அப்படி ஏதாவது ஒரு கிளுகிளுப்பையைக் காட்டிதான் சமாளிக்கனுமாம். (கிளு கிளுப்பைக் காட்டிடாதீங்க ப்ளிஸ்) இப்படி பல வழிகள் இருக்கும்ன்னும் சொல்றாங்க. உங்களுக்கு தெரிந்த வழிகள் இருந்தால் நீங்களும் சொல்லுங்க ப்ளிஸ்.
இன்றைக்கு என் ஆசிரியரை சந்திக்க இயலவில்லை. அதான் நானே அடிச்சு விட்டு இருக்கேன்.
நாளைக்கு குறளோடு சந்திப்போம்.
நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments