top of page
Search

நிழல்நீரும் ... குறள் 881, 890

07/05/2022 (435)

ஊழ் அதிகாரத்தைப் பார்த்துட்டோம். ஊழை எப்படி சமாளிப்பது என்பதையும் பார்த்து இருக்கோம். இப்போ, உட்பகை எனும் 89ஆவது அதிகாரத்தைப் பார்க்கலாம். இந்த அதிகாரத்தில் இருந்து ஒரு குறளைப் ஏற்கனவே பார்த்துள்ளோம். காண்க 29/08/2021 (187).


மீள்பார்வைக்காக:


உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போடு உடனுறைந் தற்று.” --- குறள் 890; அதிகாரம் – உட்பகை


மனதளவிலே உடன்பாடு இல்லாதவரோடு கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிலுக்குள்ளே பாம்போட சேர்ந்து இருப்பது போல.


தண்ணீர் குடிப்பது நல்லதா கெட்டதா?


என்ன கேள்வி இது? அடிக்கிற வெயிலுக்கு, வெளியே போயிட்டு வீட்டுக்கு வருவதற்குள் நாக்கு வரளுது, ஆளை அப்படியே தள்ளுது. கொஞ்சம் தண்ணிர் குடிச்சாத்தான் உயிரே ஒரு நிலைக்கு வருது. தண்ணீர் குடிப்பது நல்லதுதான்.

ஆமாம், தண்ணீர் குடிக்கனும், அதுவும் நிறையவே குடிக்கனும், அதுதான் நல்லது.


சரி, இப்படி பாருங்க, ஒருவர் நிழலிலேயே இருக்கார். அவரும் தண்ணீர் குடிப்பது நல்லதுன்னு சொல்லியிருக்காங்கன்னு நிறைய தண்ணீர் குடிச்சா என்ன ஆகும். உடம்பு பெருக்கும், காலிலே தண்ணீர் சேரும். அவர் மருத்துவரிடம் சென்றால், அவர் சொல்லுவார் தண்னீர் அளவாக குடிங்க என்று.


அப்போ, நிழலில் இருப்பவர்களுக்கு தண்ணீர் அளவாக இருக்கனும்.

தண்ணீர் நல்லதுதான் ஆனால் அதுவே துன்பம் தந்தால் கொஞ்சம் விலக்கி வைக்கனும். அது போல, நம்ம சுற்றங்கள் நல்லதுதான் ஆனால், அதில் சில நமக்கு துன்பங்களைத் தருமாயின், உட்பகையாக இருக்குமாயின் அது நல்லதில்லை. நான் சொல்லலைங்க, நம்ம பேராசான் சொல்கிறார்.


குறளைப் பாருங்க:

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாவாம் இன்னா செயின்.” --- குறள் 881; அதிகாரம் – உட்பகை


நிழல்நீரும் இன்னாத இன்னா = நிழலும் நீரும் தீமை செய்யுமாயின் தீதுதான்; தமர்நீரும் = சுற்றத்தின் இயல்புகளும்; இன்னா செயின் இன்னாவாம் = தீமை செயின், உட்பகையாக இருக்குமாயின் தீதுதான்


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )




8 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page