17/01/2022 (326)
நிழல் என்றால் நமக்குத் தெரியும். ஓளி மறைவதால் ஏற்படும் பிம்பம். அதே நிழல் ரொம்ப பெரிதாக இருந்தால்? ஒரு கற்பனை. என்ன சொல் போடனும்ன்னு யோசனை பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
ரொம்ப யோசிக்காம அதை ‘நீழல்’ ன்னு நீட்டி போட்டுவிட்டார்கள்.
‘நீழல்’ என்றாலும் நிழல்தான்.
இந்த உலகம் பல அரசர்களின் குடைகளின் நிழலில் இருந்தது. இப்போ, பல அரசுகளின் குடைகளில், அதாவது பாதுகாப்பில் இருக்கு. அதனாலே, இந்த உலகப்பரப்பை ‘பல குடை நீழல்’ என்று சொல்கிறார்கள்.
நெற்பயிர் இருக்கு இல்லையா, அதனுடைய நிழல் எவ்வளவு இருக்கும்?
ரொம்ப சிறியதாக இருக்கும்ன்னு சொல்வது கேட்குது.
ஆனால், அதற்கும் ‘நீழல்’ன்னு நீட்டி போடுகிறார் நம் பேராசான்.
என்ன சொல்லவருகிறார் என்றால், பல குடைகளின் நிழலில் இருக்கும் இந்த உலகத்தை தம் குடையின் (பாதுகாப்பின்) கீழே வைத்துப் பாதுகாப்பார்களாம்!
யாரு? நெற்பயிரின் நிழலில் இருப்பவர்கள். அவர்கள்தான் உழவர்கள்.
அவர்களின் சிறப்பைச் சுட்டிக் காட்டத்தான் இவ்வளவு சுற்று நம் பேராசானுக்கு.
“பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.” --- குறள் 1034; அதிகாரம் – உழவு
அலகு = கதிர் – நெல்லுக்கு ஆகி வந்துள்ளது. ஆகுபெயர்; நீழலவர் = உழவர்கள்;
பலகுடை நீழலும் = இந்த உலகப்பரப்பையும்; தம் குடை கீழக்காண்பர் = தம்முடைய பாதுகாப்பில் வைத்திருப்பர்.
இப்போது, நாம் அறிவியல் புரட்சி செய்துவிட்டோம். பார்த்தோம். எதற்கு அவ்வளவு பெரிய கதிர்? போடுகின்ற சக்தியெல்லாம் வீணாக நீளமான கதிருக்கே போகுதுன்னு, கதிர் சிறியதாக இருப்பதுபோல நெற் பயிரை உருவாக்கிட்டோம்! இப்போ எல்லாம் short variety தான்!
கதிர் பெரியதாக இருந்தால் தானே ‘நீழல்’? நீங்க வாங்க, நாங்க கொடுக்கும் நிழலில் (நாங்க கொடுக்கும் உரங்களில்) இருங்கன்னு உழவர்களை பிடிச்சு உள்ளே போட்டுட்டோம்.
நாம யாரு?
நாளைக்குப் பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Commentaires