top of page
Search

பெருமை பெருமிதம் ... 976, 978, 979

Writer: Mathivanan DakshinamoorthiMathivanan Dakshinamoorthi

24/08/2022 (543)

நீண்ட பதிவு - எச்சரிக்கை

பெரியோர்களைப் பேணிக் கொள்ளுதல் குடிக்கு பெருமை சேர்க்கும் என்று குறள் 976ல் நம் வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருந்தார். அது எப்படி சாத்தியம் என்ற கேள்வியோடு நிறுத்தியிருந்தோம்.


சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்

பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு.” --- குறள் 976; அதிகாரம் – பெருமை


பணிவும், பெருமிதமின்மையும் இருந்தால் பெரியோர்களை நம் அருகில் வைத்துக்கொள்ள முடியும் என்று எடுத்துச் சொல்கிறார் வரும் குறள்களில்.


இதில்தான் இப்போது பலருக்குச் சிக்கல் ஏற்படுகிறது. எனக்குன்னு சுயமரியாதை இல்லையா? நான் எந்த விதத்தில் குறைச்சல். எனக்குத் தெரிந்தது இந்தப் பெருசுங்களுக்கு நிச்சயமாக ஒன்னும் தெரியாது! இதுவரைக்கும் என்ன சாதித்ததுகள் இதுகள்? நான் ஏன் பணிவுடனும், அடக்கத்துடனும் இவர்களிடம் இருக்கனும்?... இப்படி நீள்கிறது தற்காலம்.


இது “பணம்” என்னும் ஒன்றிற்கு மட்டும் மரியாதை தருவதால் வரும் விளைவு. வாழ்க்கையில் “பணம் பண்ணுவது” என்பது ஒரு சிறிய பங்குதான்.


அது மட்டுமல்ல. “Negative favouritism” அல்லது “indifference” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். பெரியவர்கள், நம் அருகிலேயே இருப்பதால் வரும் உதாசீனமும் கூட இதற்கு ஒரு காரணம்.


"Old man and the sea" என்ற புலிட்சர் விருது (Pulitsar Prize) பெற்ற ஒரு கதை. அதை எழுதியவர் எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway). பல முறை திரைப்படங்களாக எடுக்கப்பட்ட பெருமை இதற்கு உண்டு. நேரமிருந்தால் இந்தக் கதையைப் படிக்கவும். சிறிய கதைதான்!


சிதறியவுடன் சிந்திப்பதே நம் வாழ்க்கையாகிவிட்டது. இது நிற்க.


இதற்கு தீர்வுதான் பெருமையில் உள்ள அடுத்த குறள்கள். இந்தக் குறள்களை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். மீண்டும் மீள்பார்வைக்காக அப்படியே:


10/04/2021 (83)

தருக்கும், செருக்கும் தன்னை வியக்கும்

வியவற்க அதுவும் தன்னைத் தானே வியவற்கங்கறதை நேற்று பார்த்தோம். ஒரு நண்பர் அலைபேசியில் அழைத்து தன்னை வியப்பவனை இன்னும் இரு குறள்களில் வள்ளுவப்பெருமான் இடித்து இருப்பதை தெரிவித்தார். அந்த இரண்டு குறள்களையும் இன்றைக்கு பார்க்கலாம்.


மானம் (97), பெருமை (98), சான்றான்மை (99), பண்புடைமை (100) இப்படி வரிசைப்படுத்தி அதிகாரங்களை வைத்துள்ளார் பேராசான். அதிகார விளக்கங்களை அப்புறம் பார்க்கலாம்னு ஆசிரியர் சொல்லிட்டார்.


பெருமைங்கிற 98வது அதிகாரத்தில், பெருமை எது? சிறுமை எது? என்பதை குறித்த குறள்கள் இருக்கு.


அதிலே, நமக்கு நல்ல பரிச்சயமான குறள் தான் இது:


பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து.” --- குறள் 978; அதிகாரம் - பெருமை

பெருமை என்றும் பணியும்; சிறுமை என்றும் தன்னை வியந்து அணியும்.

அணியும் = அணிந்து கொள்ளும்; ஆம் – அசை நிலை


எவ்வளவு எளிமையா இருக்கு இந்தக் குறள்! தருக்கும், செருக்கும் தன்னை வியக்கும்.

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்.” --- குறள் 979; அதிகாரம் - பெருமை

ஊர்ந்துவிடல் = ஏறிப் பயனித்து முடிவில் நிற்கும் (ஊர்ந்துவிடல் – மரபுத்தொடர் - Idiom)


நமக்கு பெருமை எதுவென்றால் பெருமிதம் இல்லாமல் இருப்பது; சிறுமை எப்படி இருக்கும் என்றால் அது இல்லாத பெருமிதத்தை வண்டியில் ஏற்றிக்கொண்டு ஊர் சுற்றி ஒர் எல்லையில் நிற்கும்.


பெருமை மிதமாக இருக்கலாம்; பெருமிதமா தான் இருக்கக்கூடாது. என்ன நினைக்கறீங்க?


அடக்கமாகவும், அளவாகவும் பெருமை கொள்வோம்!


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்





 
 
 

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page