top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

மனத்துக்கண் மாசிலன் 34, 15/02/2021

Updated: Jan 11


நன்றி, நலம், வாழ்த்துகள்.


திருக்குறளில் அனைவருக்கும் பொதுவானது எது?

 

அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் ஆகிய மூன்று பிரிவுகளில் அறத்துப்பால்  மூல அறமாகவும்; ஏனைய இரண்டும் சார்பு அறங்களாக அறிஞர்களால் பார்க்கப்படுகிறது. எல்லோருக்கும் பொதுவானது அறத்துப்பால்.


சின்னஞ்சிறார்களை கூப்பிட்டு ‘இன்பத்துப்பால்’ படின்னு சொல்லக்கூடாது. அது அவர்களுக்கானதுமல்ல.


அறத்துப்பாலில், நான்கு ‘இயல்கள்’ இருக்கு. அவை யாவன: பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், மற்றும் ஊழியல். திருக்குறளில் எந்தப் பாலை எல்லோரும் படிக்கணும் என்றால் அது அறத்துப்பால்.


அந்த அறத்துப்பாலில் எந்த இயலை குறிப்பாக அனைவரும் கற்கணும்னா அது ‘பாயிரவியல்’


அந்த பாயிரவியலில் எந்த அதிகாரத்தை நாம் எல்லாம் தெரிஞ்சிவைச்சுக்கணும்னா அதுதான் ‘அறன் வலியுறுத்தல்’ ங்கிற அதிகாரம்.


அந்த ‘அறன் வலியுறுத்தல்’ ங்கிற அதிகாரத்தில எந்த குறள் முக்கியம்ன்னு கேட்டா அது தான் முப்பத்தி நான்காவது குறள். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றை கடந்து அமைதியான வீட்டுக்குப் போக அதனை 34 வது குறளில் வள்ளுவப்பெருந்தகை அமைத்தால் போலவே இருக்கு.


அந்தக் குறள் இதோ:


“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.”  34, அதிகாரம் - அறன் வலியுறுத்தல்


மனத்துக்கண் = மனசில் ; மாசு இலன் ஆதல் = குற்றம் இல்லாதவனா ஆயிட்டா ; அனைத்து அறன் = அது தான் அறம் ; (‘அறம்’ என்ற சொல்லுக்கு ‘அறன்’ என்பது போலி. போலியை பற்றி முன்னாடியே பார்த்திருக்கோம்!)

ஆகுல = ஆடம்பரம், தேவையற்றது ;  நீர = தன்மை; ஆகுல நீர பிற= மற்றது எல்லாம் தேவையற்றது.


உள்ளத்தில இருக்கறது தான் உதட்டுல வருது; உதட்டுல வருவது தான் உண்மையாவும் ஆகுது.  இதை தான் ‘மனம், மொழி, மெய்’ ன்னு சொல்றாங்க. இது சமஸ்கிருதத்திலே ‘மனஸா, வாச்சா, கர்மனா’ ன்னு ஆகுது.


நாம் எல்லாம் இதிலே கொஞ்சம் ‘மனசு’ வைப்போம் சரியா?


இந்த அறத்தினாலே என்னா சார் யூஸ்? (யூஸ்ஸை பயன்னு இங்லீஷ்ல சொல்வாங்க!)

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன்,


உங்கள் அன்பு  மதிவாணன்




1 view0 comments

Commentaires


bottom of page