யாதும் ஊரே ... பகுதி 2
29/04/2022 (427)
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே … இதோட நிறுத்தி இருந்தோம்.
அடுத்து தொடர்கிறார். சீ, சீ இந்தப் பழம் புளிக்கும்ன்னு விட்டுட்டு அடுத்த வேலைக்கு போகனும். அதை விட்டுட்டு, “வெறுத்துப் போய் துன்பம்தான் வாழ்க்கை”ன்னு புலம்பக் கூடாது.
… முனிவின்,
இன்னாது என்றலும் இலமே;
முனிவு = வெறுப்பு, கோபம்; இன்னாது = துன்பம்
அடுத்து ஒரு உதாரணம்: “மின்னல் அடிக்குது மழை வரப் போகுது. அந்த மழை முதலிலே ஒரு துளியாகத்தான் உருவாகுது, ஆனால், அதுவே பெரு மழையாக நிலத்திற்கு வரும் போது பெரும் கற்களையே உடைத்துப் போடுகின்றது. அதற்கு அந்த சக்தி எப்படி வந்தது?”ன்னு கேட்கிறார். அது எதுவுமே பண்ணாம அந்த சக்தி அதற்கு வந்து விட்டது?
'மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று…”
பொருது = அராவுதல், அதாவது ரம்பம் போடுவது: தண் துளி தலைஇ = நீர் துளியாக இருக்கு முதலில்; மல்லல் = ஆற்றல்; யாற்று? = எங்கனம்? எப்படி?
அடுத்துதான் அவர் சொல்ல நினைக்கின்ற கருத்துக்கு வருகிறார். இது வரைக்கும் நம்மை தயார் பண்ணி வைத்திருக்கிறார்.
“அதாவது தம்பி, ஓடுகின்ற ஆற்றின் திசையில் (Any fish can swim in downstream; It includes dead fish also!) ஒரு தெப்பம் எப்படி துடுப்பே போடாமல் போகுமோ, அது போல, எல்லாத்தையும் ஏற்கனவே எழுதி வைச்சிட்டான். உன் வாழ்க்கை அது பாட்டுக்கு போகும். Take it easy பா. எல்லாத்துக்கும் ரொம்ப குழப்பிக்காதே. ஒரு தெளிவுக்கு வா."
"அதை விட்டுட்டு, அவனைப் பாரு எவ்வளவு பெரிய ஆளாயிட்டான்னு அன்னாந்து பார்ப்பதும், இவனைப் பாரு, இவன் தேறவே மாட்டான்னு ஏறி மிதிச்சுட்டு போவதும் வேண்டாத வேலை”ன்னு சொல்கிறார்.
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
அவர் கடைசியிலே சொல்லாமல் சொன்னது என்னவென்றால், மீண்டும் முதல் வரியிலிருந்து படிங்க அப்போதான், நான் சொல்ல வந்தது உங்களுக்கு நல்லாவே புரியும் என்பதை சொல்லாமல் விட்டு விட்டார்.
மீண்டும் ஒரு முறை முழுமையாக அந்தப் பாட்டை படிங்க ப்ளீஸ்.
இந்தப் பாட்டை வளரும் பருவத்திலே இருப்பவர்களுக்கு சொல்ல முடியுமா?
உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
