top of page
Search

யான்நோக்குங் செவிச்சொல்லும்...1094, 694

07/09/2021 (196)

சிரிக்கனும்னு சொல்லும் நம் பேராசான், சிரிக்கக் கூடாதுன்னும் சொல்லியிருக்கார்.


ஒரு சபையிலே இருக்கும்போது பக்கத்திலே இருப்பவர்கிட்ட சத்தம் போடாம காதுகிட்ட பேசி (அதாங்க குசுகுசுன்னு பேசறது) இன்னொருவரைப் பார்த்து சிரிப்பதை தவிர்க்க வேண்டும் என்கிறார்.


‘மெல்லமா’ இல்லை ‘மெள்ளமா’ என்பதிலே ஒரு குழப்பம். அதனாலே, ‘சத்தம் போடாம’ என்று சத்தம் போடாம போட்டுவிட்டேன்.

அந்தப் பிரச்சனையை என்னவென்று பார்த்துடலாம்ன்னு தோன்றிவிட்டது. அதைப் பார்த்துவிட்டு தொடருவோம்.


ஒரு குறளை எடுத்துக்கலாம் உதாரணத்துக்கு. அதுவும் நாம் பார்த்துகொண்டிருக்கும் சிரிப்பு சம்பந்தப்பட்டதுதான்.


யான்நோக்குங் காலை நிலன்நோக்கும், நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.” ---குறள் 1094; அதிகாரம் – குறிப்பறிதல்


யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் = நான் பார்க்கும் போது பார்க்காத மாதிரி கிழே பார்க்க வேண்டியது; நோக்காக்கால் = பார்க்காதபோது; தான்நோக்கி மெல்ல நகும் = (அவள்) என்னைப் பார்த்து மெல்ல சிரிக்க வேண்டியது.


இங்கே, மெல்ல என்றால் மென்மையாக என்று பொருள். மெல்ல என்பதிலே, ஒருவித நளினமும் மென்மையும் இருக்கிறது.


கவிஞர் வாலி எழுதிய பாடல், ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்ற திரைப்படத்திலிருந்து ‘குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும் …’ அதிலே:


…நான் அள்ளிக்கொள்ள, அவள் பள்ளி கொள்ள

சுகம் மெள்ள மெள்ளவே புரியும் … (அப்படியே போயிடாதீங்க!)


இங்கே, மெள்ள என்றால் மெதுவாக என்ற பொருள்படுகிறது. அப்போ, மெல்ல என்றால் மென்மையாக என்றும், மெள்ள என்றால் மெதுவாக என்றும் பொருள் எடுக்கலாம் போல தோன்றுகிறது. ஆனால், நடைமுறையிலே இந்த வித்தியாசம் மறைந்துவிட்டாற் போல் தெரிகிறது. ‘மெல்லத் தமிழினிச் சாகும்’ என்ற மகாகவி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நமது தமிழ் இது, ஆகையால் மென்மையாக இருக்கட்டுமே என்று எழுதியிருக்கலாம். இது மெல்ல நிற்க.


சிரிப்பு கூடாது என்று கூறும் குறள் இதோ:

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகும்

ஆன்ற பெரியார் அகத்து.” --- குறள் 694; அதிகாரம் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்


ஆன்ற பெரியார் அகத்து = பெரியவர்கள் நமது பக்கத்தில் இருந்தால்; செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகும் = பிறரிடம் மெதுவாக பேசுவதும் பிறகு சேர்ந்து சிரிப்பதையும் தவிர்க்கவும்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் மதிவாணன்.






3 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page