“கண்டதைக் கற்றால் பண்டிதன் ஆகலாம்”
கண்டு அதனைக் கற்றால் பண்டிதன் ஆகலாம்.
எதைக் கண்டு? நமக்கு தேவையனதைக் கண்டு.
எப்படிக் காணுவது? நன்றாக எண்ணி, ஆராய்ந்து, அதனினும் ஏதாவது தள்ள வேண்டியிருந்தால் விலக்கி
எதாவது உதாரணம்? பாலிலிருந்து நீரை விலக்குமாமே ஒரு பறவை அதனைப் போல
இதைத் தான் நாலடியாரில்:
கல்வி கரை இல; கற்பவர் நாள் சில;
மெல்ல நினைக்கின், பிணி பல;
தெள்ளிதின்ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர் ஒழியப்
பால் உண் குருகின் தெரிந்து. --- 135 நாலடியார்
(நீர் ஒழியப் பால் உண் குருகு = பாலிலிருந்து நீரை ஒழித்து பருகும் பறவை)
பாடலின் பொருள்:
கல்விக்கு ஒரு முடிவில்லாததனாலேயும், நம் வாழ் நாளுக்கு ஒரு முடிவு இருப்பதாலேயும் நல்லா ஆராய்ந்து நமக்கு தேவையானதை கற்கணுமாம்.
அப்போ தான் நம்முள்ளே அறிவு ஊறுமாம். அதனை நம்ம வள்ளுவப்பெருமான்
“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.” - 396
தொட்ட = தோண்டிய; அனைத்து = அளவிற்கு; கேணி = கிணறு
கல்வியின் மூலச்சொல் ‘கல்’. ‘கல்’ ன்னா ‘தோண்டுதல்’ ன்னு பொருளாம்.
ஆங்கிலத்துக்கு இது போயி ‘cull’ ன்னு ஆயிட்டுது போல.
‘culled the best passages from the poet’s work’. கவிதையிலிருந்து சிறந்த பகுதிகளை தோண்டி எடுத்ததை சொல்ல நம்ம ‘கல்’ ஐ பயன் படுத்துறாங்க. இது போல நிறைய இருக்கு!
இன்றைக்கு கொஞ்சம் சப்ஜெக்ட் ஓவரா போயிடுச்சு இல்ல. என்ன பண்றது?
இது நிற்க. நம்ம மெயின் சப்ஜெக்ட்டுக்கு வந்துடுவோம்.
அப்போ நாம் தோண்டம விட்டா? வள்ளுவப்பெருமான் விடுவாரா நம்மை?
நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்.

Commentaires