top of page
Search

24/08/2024, பகவத்கீதை, பகுதி 10

அன்பிற்கினியவர்களுக்கு:

உலகெங்கிலும் சட்டையின் நிறத்தைக் குறிப்பாகக் கழுத்துப் பட்டையின் (Shirt’s collar) நிறத்தைக் கொண்டு பணிகளைப் பகுக்கிறார்கள் (Division of Labours). பெரும்பான்மையாக, நீலக் காலர் வேலைகள் என்றும் வெள்ளைக் காலர் வேலைகள் என்றும் பிரிக்கிறார்கள். (Blue collar jobs and white collar jobs)

இந்த இரு நிறங்களைத் தவிர ஊதாக் காலர் (Purple collar), பச்சைக் காலர் (Green collar) வேலை என்றும் உள்ளன.


நில நிறம் உடல் உழைப்பில் திறமையை வெளிப்படுத்தும் வேலைகள். எடுத்துக் காட்டாக: மின்னியல் பணி (Electrician), கட்டிடப் பணி (Building construction) உள்ளிட்டவை.


வெண்மை நிறம் அறிவின் துணை கொண்டு ஆற்றும் பணிகள். நிர்வாகம் (administration) முதலான பணிகள்.


ஊதா நிறம் (Pink collar) உடலும் அறிவும் இணைந்த பணிகள்;

பச்சை நிறம் (Green collar) சுற்றுச் சூழல் பணிகளைக் குறிக்கும்.

இந்த நிற வகையில் குற்றங்களைக் (Crimes) கூடப் பிரிக்கிறார்கள். Blue collar crimes and white collar crimes என்று!


இந்த நிறப் பகுப்பெல்லாம் பணிகளின் பகுப்பே (Division of Labours)!

பணி செய்பவர்களின் பகுப்பல்ல (Division of Labourers)!


அனைத்துப் பணிகளும் அவசியமான பணிகளே. அனைத்துப் பணிகளும் கண்ணியம் (Dignity of Labour) மிக்கதே. காண்க https://foxly.link/easythirukkural_குறள்_972


இன்று தச்சு வேலை செய்பவர் நாளை மாவட்ட ஆட்சியர் (District Collector) ஆகலாம்! இந்த வித்தையைக் கல்வி செய்யும்.


அறிவு அற்றங் காக்கும் கருவி என்றார் நம் திருவள்ளுவப் பெருந்தகை, காண்க https://foxly.link/easythirukkural_குறள்_421


திருக்குரானிலிருந்து ஓர் இறை வசனம்:


உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடம் அதிகக் கண்ணியம் வாய்ந்தவர் அதிக இறையச்சம் கொண்டவர்தான். --- திருக்குரான் 49:13.


மேலே கண்ட அந்த வசனத்திற்கு உரையாக:


3489. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், ஓர் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு, நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம்' (49:13)


எனும் இறைவசனத்தில் இடம்பெற்றுள்ள “ஷுஊப்' (சமூகங்கள்) என்னும் சொல் பெரிய இனங்களையும் “கபாயில்' (குலங்கள்) எனும் சொல், அந்த இனங்களில் உள்ள உட்பிரிவுகளையும் குறிக்கும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.


இந்த இறை வசனத்தில் வரும் சமூகம், குலம் என்ற சொல்களுக்கு கிளைகள், கோத்திரங்கள் என்று மார்க்க அறிஞர்கள் சிலர் உரை சொல்கிறார்கள்.


அறிஞர்கள் சிலர் நெருங்கிய சொந்தங்கள், தூரத்துச் சொந்தங்கள் என்றும் உரை சொல்கிறார்கள்.


இவற்றையெல்லாம் கவனத்தில் நிறுத்துவோம்!


சிருஷ்டி, படைத்தல், கண்டுபிடிப்பு என்ற சொல்கள் எல்லாம் தொடர்புடைய சொல்களே.


கண்டுபிடிப்பு என்ற சொல்லுக்கு இரு வேறு பொருள்கள் இருக்கின்றன. அவை யாவன: 1. புதிதாகப் படைப்பது (Innovation); 2. பொதிந்திருப்பதை வெளிக் கொணர்வது (Discovery).


ஒளிரும் விளக்கினைக் (Light Bulb) கண்டுபிடித்தவர் (Invented) தாமஸ் ஆல்வா எடிசன்; பூவி ஈர்ப்பு விசையைக் (Gravity) கண்டுபிடித்தவர் (Discovered) சர் ஐசக் நியூட்டன்.


புதிய கண்டுபிடிப்புகள் (Inventions) பழைய கண்டுபிடிப்புகளை அடித்தளமாக (building blocks) இருத்திக் கொண்டு மலரும்.


ஆனால், இயற்கையில் இருப்பதை உணர்ந்து அந்தக் கருத்துகளைச் சட்டங்களை வெளிக்கொணர்வது Discovery. இதனையும் ஆக்குதல், படைத்தல், கண்டுபிடித்தல் போன்ற சொல்களிலும் சொல்கிறார்கள்!

இவற்றையும் கவனத்தில் இருத்துவோம்.


நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




20 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page