top of page
Search

அடுத்தது காட்டும் பளிங்குபோல ... குறள் 706

27/10/2021 (246)

பளிங்குக் கல் பற்றி நமக்குத் தெரியும். பளிங்குக் கற்கள் புவியியல் மாற்றங்களாலும் மேற்பரப்பிலிருந்து கொடுக்கப் படும் அழுத்தம் மற்ற வெப்பத்தாலும் சுன்னாம்புக் கற்கள் கால நிலை மாற்றம் பெற்று பளிங்குக் கல் (Marble) ஆகிறது.


அதைத் தோண்டி, வெட்டி எடுத்து மெருகூட்டும் போது பள பளவென பளிங்காகிறது. நாம அதிலே நம் முகத்தைக் கூட பார்க்கலாம்.


நமக்கும் அதற்கும் பல ஒற்றுமைகள் இருக்கு. நாமும் பல உருமாற்றத்தால் உருவாகியிருக்கிறோம். மெருகூட்டப் படும் போது மேன்மை அடைகிறோம். பளிங்கின் மேல் ஏதாவது பட்டு அதை கவனிக்காமல் விட்டு விட்டால் அது சேத மாகிவிடுகிறது, பளிங்கு உருகுலைகிறது. நாமும் அது போலத்தான். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மீதத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன்.


திருக்குறளை சொல்லுவேன்னு பார்த்தால் உனக்குத் தெரிந்தது எல்லாம் சொல்கிறாயான்னு கேட்கறீங்க? அதானே?


இதோ குறளுக்கு வந்து விடுகிறேன். குறிப்பறிதலுக்கு எது கருவி? என்ற கேள்விக்கு நம் பேராசான் அடுத்து வரும் மூன்று குறள்களில் குறிப்பால் உணர்த்துகிறார். ஒன்றுமில்லைங்க. நம்ம முகம்தான்! அதைப் போல ஒரு கருவி கிடையாதாம் குறிப்பை அறிவதற்கு! அதைப் பார்த்தாலே போதுமாம் பல செய்திகளை அது நமக்கு உணர்த்துமாம்.


எங்கே இப்போ எல்லாம் நிகழ் நிலையிலேயே (online) நடக்குதுன்னு நீங்க சொல்வது எனக்கு கேட்குது. காலம் மாறும். இல்லையென்றால் நாம மாறிக்க வேண்டியதுதான்!


ஓஒ பாருங்க மறுபடியும் எங்கேயோ போயிட்டேன். இது நிற்க.


குறள் 706ல்: உள்ளத்தில் ‘மிக்கதை’, அதாவது ரொம்ப அதிகமான, ஆழமாக தாக்கும் உணர்ச்சிகளை முகம் வெளிப்படுத்துமாம். அது எப்படி இருக்கும் என்றால் பளிங்க்கின் பக்கத்தில் எதாவது வைத்தால் எப்படி அதைப் பிரதி பலிக்கிறதோ அது போல என்கிறார் நம் பேராசான்.


கடுத்தது காட்டும் முகம்.” --- குறள் 706; அதிகாரம் – குறிப்பறிதல்


அடுத்தது காட்டும் பளிங்குபோல = பளிங்கின் பக்கத்தில் எந்த நிறப் பொருளை வைத்தாலும் அந்த நிறத்தை அது காட்டுவது போல; நெஞ்சம் = மனதின் தவிப்பு; கடுத்தது= மிக்கது, அதிகம் பாதித்தது (கடி என்ற உரிச்சொல்லிருந்து வந்துள்ளது); காட்டும் முகம் = காட்டிக் கொடுக்கும் முகம்.


அதுக்குத்தான் சொல்றாங்க முகத்தைப் பார்த்து பேசுங்கன்னு! இன்னும் தொடர்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




7 views0 comments
Post: Blog2_Post
bottom of page