அற்கா இயல்பிற்று, நல்ல படத்தைத் தொடர்ந்து ... 333, 20/01/2021
- Mathivanan Dakshinamoorthi

- Jan 20, 2021
- 1 min read
Updated: Aug 14
நன்றி, நன்றி, நன்றி.
கருத்துக்களையும், அன்பினையும் வெளிப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
நேற்றைய செய்தியைப் படித்த எனதருமை ஆசிரியர் ஒருத்தர் அழைத்தார். உவமை ரொம்ப நல்லாயிருந்தது. ஆனா பொருந்தி வரலையேன்னார்.
நானே திருவள்ளுவரை நம்பி வண்டி ஓட்றவன். என்னைக் கேட்டா?
என்னாது சார்ன்னு கேட்டேன்.
அடுத்த ஆட்டத்துக்கே கூட்டம் வந்துடுதேப்பா. இங்கே அந்த மாதிரி நடக்கலயே?
பார்த்தேன். “ஙே” ன்னு விழிச்சுட்டு டக்குனு நவுந்துட்டேன்.
திருவள்ளுவர் தப்பு பண்ணியிருக்கமாட்டாருன்னு தெரியும். என்னா ஒரு சிக்கல்? (வடிவேலுவை கொஞ்சம் கற்பனை பண்றிங்க இல்லை…)
தம்பியுடையான் படைக்கு அஞ்சான்ற மாதிரி, எனதருமை இளவல் ரத்தன் ஒரு குறளை அனுப்பியிருந்தார்.
அது தான் 333 வது குறள். இது ஒரு சிறப்பு மிக்க குறள். இதிலே இரண்டு புதிய வார்த்தைகளை போட்டிருக்கார். மொத்த திருகுறள்களிளும் ஒரே ஒரு முறை தான் பயன் படுத்திய வார்த்தைகளில் இதுவும் அடங்கும். “அற்கா, அற்குப” அற்கா =நிலையாத, அற்குப = நிலைத்த
நல்ல படத்தை தொடர்ந்து ஓட்டினா கூட்டம் வந்துட்டேஏ யிருக்கும். நம்பிக்கையா இருக்கலாம். அந்த மாதிரி, நல்ல செயல்களை செஞ்சிட்டேஏ இருந்தா இருப்பை தக்க வைத்துக்கலாம். இது தான் கருத்து.
அந்த அருமையான 333 வது குறள் இதோ:
“அற்கா இயல்பிற்றுச்செல்வம்அதுபெற்றால் அற்குபஆங்கேசெயல்.” --- குறள் 333; அதிகாரம் - நிலையாமை
நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.
உங்கள்
அன்பு மதிவாணன்
(---உங்கள் அனைவரின் கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது)






Comments