இருவேறு நுண்ணிய ... 375, 373
11/02/2021 (25)
நலம். நன்றி. வாழ்த்துகள்.
என்ன தான் பலவற்றை கற்றிருந்தாலும் சிலருக்கு அந்த அறிவு வெளிப்படாம போகுதே, அதுக்கு திருக்குறளில் ஏதாவது இருக்கா? அது தான் கேள்வி. இருக்க தான் செய்யுது! – இது தான் பதில்.
அது மட்டுமல்ல. நல்லவர்கள் வறுமையிலே வாடுவதும், அல்லாதவர்கள் செல்வத்தில் திளைப்பதனையும் கூட பார்க்கலாம்.
ஒரு செயல் நன்றாக அமைய எட்டு காரணங்கள் இருப்பதாக தொல்காப்பியம் சொல்லுது. அவையாவன: வினை, செய்வது, செயப்படும் பொருள், இடம், காலம், கருவி, நோக்கம், மற்றும் பயன்.
சில சமயம், இந்த எட்டும் பொருந்தியிருந்தாலும் எதிர்பார்த்த மாதிரி வருவது இல்லை. இதுக்கு சரியான காரணமும் தெரிவதில்லை. சரியா வரணும் இதுதான் இயற்கை விதி (natural Law). சரியா வரலைனா அதுதான் ‘விதி விலக்கு’.
இந்த ‘விதி விலக்கை’ தான் நாமெல்லாம் ‘விதி’ன்னு சொல்றோம்! இது ஒரு நகைமுரண்.
‘விதி’ ன்ற சொல்லுக்கு ஊழ், வினை, தெய்வம், தலைஎழுத்து என்றெல்லாம் உலக வழக்கிலே பொருள் அமைவதை பார்கலாம். இது கொஞ்சம் ஆழமான சப்ஜெக்ட். சமயம் வாய்க்கும் போது மீண்டும் பேசுவோம்.
மேலே பார்த்த விஷயத்தை ‘ஊழியல்’ என்று ஒரு இயலாக தனியாக வைத்து வழக்கத்துக்கு மாறாக அந்த இயலில் ஒரே ஒரு அதிகாரம் ‘ஊழ்’ மட்டும் அமைத்திருக்கிறார்.
அதிலே உள்ள இரு குறள்களை பார்க்கலாம்.
“இருவேறு உலகத்துஇயற்கைதிருவேறு தெள்ளியர்ஆதலும்வேறு.” --- குறள் 375
திரு = செல்வத்தில் திளைப்பவர்களுக்கு ஆகி வந்துள்ளது (ஆகு பெயர்)
தெள்ளியர் = அறிவுடையவர்
உலகத்து இயற்கையே இப்படி தான். ஒன்று ஒழுங்கா இருக்கும். மற்றொன்று விதி விலக்காகவும் இருக்கும் புரிஞ்சுகிடுங்க ப்ளிஸ் – இது தான் பொருள்.
“நுண்ணிய நூல்பலகற்பினும்மற்றும்தன் உண்மைஅறிவேமிகும்.” ---குறள் 373
இந்த குறளில், ஒருத்தன் என்ன தான் கற்றாலும் அது அவனுடைய அறிவை மிகைப் படுத்தாமலும் போகலாம்ன்றார். அப்போ என்ன தான் பண்றது?
உங்களுடைய கருத்துக்களை பகிரவும். தொடருவோம் நாளை. நன்றி
உங்கள் அன்பு மதிவாணன்
