ஞாலம் கருதினும் ... 484
12/11/2022 (618)
கருவி மற்றும் காலத்தின் முக்கியத்துவத்தைச் சொன்னவர், மேலும் தொடர்கிறார்.
உலகத்தையே கட்டி ஆளனுமா? அதுவும் முடியும் என்கிறார்.
உலகம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று. அவர், அவர் உலகத்தைக் கட்டி ஆள்வதைச் சொல்கிறார்.
வலிமை, காலம், கருவி ஆகியவையுடன் தக்க களமும் அமைந்துவிட்டால் உலகமே உன் கையில்தான் என்கிறார்.
“ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்.” --- குறள் 484; அதிகாரம் – காலமறிதல்
ஞாலம் = உலகம்; காலம் கருதி இடத்தான் செயின் = தக்க தருணத்தில், தக்க களத்தில் ஒரு செயலைச் செய்தால்; ஞாலம் கருதினும் கைகூடும் = நீங்க நினைப்பது உலகமே என்றாலும் உங்கள் வசப்படும்.
தக்க தருணத்தில், தக்க களத்தில் ஒரு செயலைச் செய்தால், நீங்க நினைப்பது உலகமே என்றாலும் உங்கள் வசப்படும்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
