top of page
Search

தென்புலத்தார் ... 43

02/03/2021 (44)

நன்றி, மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.

பதினோரு கடமைகளில் ஆறினை பார்த்துட்டோம். அடுத்த ஐந்து குறள் 43ல இருக்கு அதனை இன்றைக்கு பார்க்கலாம்.


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.” --- குறள் 43; அதிகாரம் - இல்வாழ்க்கை


தென்புலத்தார் = தென்திசையில் உறைவோர்; தெய்வம் =வழிபடு கடவுள்; விருந்து = விருந்தினர், அறிமுகமிலாதவர் விருந்தினராவார்; ஒக்கல் = சுற்றம், இயற்கை உறவினால் அமைந்த தொடர்புடையவர்கள்; தான் = நாம தான்; என்று = என; ஐம்புலத்தாறு = ஐவருக்கும் நல்வழியாக; ஓம்பல் =அமைதல், பேணுதல், போற்றுதல்; தலை = சிறப்பானது


தென்திசையில் உறைவோர்ன்னா நம் முன்னோர்களையும் மூதாதையர்களையும் குறிக்கும்ன்னு அறிஞர்கள் சொல்றாங்க. கடல்கோள் கொண்டு தென் திசையில் இருந்த பண்டைய தமிழகம் அழிந்து பட்டதாலும் இருக்கலாம். வழக்கமா இடுகாடும், சுடுகாடும் தென்திசையில் அமைவதை சுட்டும் விதமாகவும் தெற்கு திசை இருக்கலாம்ன்னு சொல்றாங்க.


மூதாதையர்களின் நினைவை போற்றுவதும் இல்வாழ்வானுக்கு ஒரு கடமை. ஏறிய ஏணிகளை எத்திவிடாம நினைவில் ஏந்துவது நலமான செயல்தானே?

அடுத்து வழிபடு கடவுளை போற்றுவதும் ஒரு கடமையா வைக்கிறார். விருந்தினருக்கு ஆதரவாகவும் இருக்கனுமாம். இருப்போம்.


சுற்று, சுற்றா விரிவதாலே சுற்றமாயிட்டுது. சுற்றத்தாரோடு இயைந்து இணங்கியிருப்பது உயர்வுக்கான இருவழிப்பாதை. இதை பேணுவதும் ஒரு கடமைதான்.


இதெல்லாம் சொல்லிட்டு வந்தவர், கடைசியா போட்டாரு பாருங்க ‘தான்’ அதான் நம்ம வள்ளுவப்பெருமானின் சிறப்பு. தம்பீ, உன்னை மறந்துடாதே!

இதை முதல்லயே சொல்லியிருக்கலாம். ஆனால் நம்மை பற்றி தான் தெரியுமில்ல. கடைசியில வருவதற்குள்ள முதல்ல சொன்னதை மறந்துடுவோம். அதான் கடைசியா போட்டு கவனப்படுத்தறார். நிற்க.


ஒவ்வொரு பொருளுக்கும் தனித்த பண்போ, பண்புகளோ (attributes) இருக்கும். அந்த பொருளுக்கு தனித்த பயனுமிருக்கும் (use). ஆனால், இரண்டுமே (attributes & use) ஒன்னாயிருக்குமா? இருக்குங்கிறார். தேடலாம் வாங்க.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்.





10 views0 comments
Post: Blog2_Post
bottom of page