பாரதி – அறுபத்தாறு ...
09/04/2022 (407)
“பாரதி – அறுபத்தாறு” என்று மகாகவி பாரதி 66 பாடல்களைப் பாடியுள்ளார். அதிலிருந்து சில வரிகளை நாம் ஏற்கனவே பார்த்திருக்கோம். காண்க 31/03/2021 (73).
அந்தப் பாடல்களை எப்படி எழுதறேன்னு சொல்லிட்டு எழுதறார் மகாகவி.
“எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்
மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றேன்
மனோன்மணியென் மாசக்தி வையத்தேவி …
‘மனதினிலே நின்று இதனை எழுதுகின்றேன்’ன்னு சொல்கிறார். அதுவும் எப்படியாம் மாசக்தி வையத்தேவி அவரை உருமாற்றி சித்தனாக்கி சொல்கிறாளாம்!
பாரதியின் சீடன் ஒருத்தன் கேட்கிறான்.
சீடன்: நலிவும் சாவும் வரகக்கூடாது. என்ன பண்ணனும்?
நலிவும், சாவும் வரக்கூடாதா அப்போ நல்லாக் கேளு நான் சொல்வதைன்னு சொல்கிறார்.
…
“நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர்
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை
அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போதே சாவுமங்கே அழிந்து போகும்…”
நாணம், கவலை, சினம், பொய், அச்சம், வேட்கை அழிச்சுடு உனக்கு சாவு வராது என்கிறார்.
சீடன் குழம்பறான். என்ன இத்தனையும் அழிக்கனுமா? நடக்கிற வேலையா இதுன்னு நினைச்சிட்டு கிளம்பறான்.
அவன் குழம்பறதைப் பார்த்த மகாகவி பாரதி அவனைக் கூப்பிடறார். இரு உனக்கு ஒன்னே ஒன்னு சொல்றேன். ஆனா அது ரொம்ப அவசரமாக பண்ணனும். மீதியெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். அதை மட்டும் பண்ணுன்னு சொல்கிறார்.
“மிச்சத்தைப் பின் சொல்வேன், சினத்தை முன்னே
வென்றிடுவீர் மேதினியில் மரணமில்லை…”
நேரம் இல்லைப்பா. முதல்ல கோபத்தைக் காலி பண்ணு. மீதி எல்லாத்தையும் அப்புறம் பார்த்துக்கலாம்.
சீடனுக்கு புரிஞ்சிடுச்சு சினத்தை அழிக்கனும்ன்னு. ஆனால், முதல்ல சினம் ஏன் வருது? அது அப்படியென்ன முக்கியம்?
இந்தக் கேள்விகளைமகாகவியிடம் வைக்கிறான், என்ன சொல்கிறார்ன்னு நாளைக்குப் பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
