top of page
Search

கதைதான் இன்றைக்கு ...

06/04/2022 (404)

தென்கச்சி கோ. சுவாமிநாதன் (1946 -2009) என்ற ஒரு பெரும் பேச்சாளர், எழுத்தாளர் இருந்தார். ரொம்ப நகைச்சுவையாக சிறந்த கருத்துகளைப் பேசுவார். வானோலியில் ‘இன்று ஒரு தகவல்’ எனும் தொடரையும் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தொடரை தொலைக்காட்சியிலும் வெற்றிகரமாக வழங்கி வந்தார்.

அவர் சொன்ன ஒரு கதை:


விமான நிலையத்திலே ஒரு நிகழ்ச்சி: அங்கே, இந்தப் பயனப்பெட்டியை எல்லாம் சோதனை பண்ணுவாங்க (scanning) இல்லையா, அங்கே பணிபுரிபவருக்கும் ஒரு பயனிக்கும் இடையே பிரச்சனை. அந்தப் பயனி ஒரு பெரிய மனிதர் சமுகத்திலே.


அந்தப் பெரிய மனிதருக்கு கடும் கோபம் வந்துட்டுது. குரலை உயர்த்தி அந்தப் பணியாளரைத் திட்ட ஆரம்பிச்சுட்டார். ஆனால், அந்த தம்பியோ எதுவும் பேசாமலே இருக்கார். எந்த ஒரு எதிர் வினையையும் அந்த தம்பி காட்டவேயில்லை. பெரிய மனுசருக்கு கோபம் உச்சிக்கு போகுது. ஒரு கட்டத்திலே அந்த பெரிய மனிதர் அடிக்க முற்படுகிறார். உடனே சிலர் தடுத்து அவரை அனுப்பி வைக்கிறார்கள்.


பெரிய மனிதரின் செய்கைக்கு யாராக இருந்தாலும் கோபம் வந்திருக்கனும். எப்படி இந்தத் தம்பிக்கு கோபமே வரலைன்னு ஒருத்தருக்கு ரொம்ப ஆச்சரியமாயிடுச்சு.


சினத்தை தவிர்க்க பலரும் பல வகையிலே முயன்று தோற்றுக் கொண்டு இருக்கும்போது எப்படி இவராலே மட்டும்ன்னு கேள்வி எழ அந்தத் தம்பிக்கிட்டயே போய் கேட்டார்.


“ஏன் தம்பி உங்களுக்கு கோபமே வரலையா?”


“அது எப்படி சார், மனுசன்னா கோபம் வரத்தானே செய்யும். எனக்கும் கோபம் தான். அதை அவங்க, அவங்க வழியிலே deal பண்ணனும் (சாமாளிக்கனும்) சார்.”


“அது என்ன வழிப்பா?”


“பாருங்க சார். அந்தப் பெரிய மனுசன் இப்போ ஜப்பானுக்கு போயிட்டு இருக்கார். ஆனால், அவர் பெட்டி இப்போ அமெரிக்காவுக்கு போயிட்டு இருக்கு. நாம ஏன் சார் வீணா சண்டை போட்டுக்கிட்டு. நம்ம வழியிலே சமாளிக்கனும் சார்” ன்னு சொல்லிட்டு நிங்க எங்க சார் போகனும்ன்னு கேட்டாராம்? அந்தத் தம்பி!


சரி, இந்தக் கதை இப்போ எதற்குன்னு கேட்கறீங்க? வெகுளாமை அதாங்க சினம் கொள்ளாமை பற்றி நம் பேராசான் என்ன சொல்லப் போகிறார்ன்னு சொல்றேன்னு ஆசிரியர் சொன்னார்.


ஆசிரியர் இன்னும் வருகிற மாதிரி தெரியலை. அதான் இந்தக் கதையைச் சொல்லி சமாளிச்சேன்.


நாளைக்குப் பார்கலாம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)







11 views2 comments
Post: Blog2_Post
bottom of page