14/02/2023 (712)
‘ வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார்’ என்றார் குறள் 584ல்; ‘கடாஅ உருவொடு கண்ணஞ்சாது’ என்றார் குறள் 585ல்; ‘துறந்தார் படிவத்தர் ஆகி’ என்றார் குறள் 586ல்.
கடந்த மூன்று குறள்களாக ஒற்றுக்கு இலக்கணங்களைச் சொல்லிக் கொண்டு வருகிறார். அடுத்தக் குறளிலும் அதனைத் தொடர்கிறார்.
அதாவது, பல செயல்கள் மறைவாக நடக்குமாம். பின்னே ஊழலும், சதியும் செய்கிறவர்கள் வெளிப்படியாகவா செய்வார்கள் என்று தானே கேட்க்கிறீர்கள்? மிகவும் சரி.
ஆனால், அவர்களுக்கெல்லாம் ஒரு இயல்பு இருக்கும். அவங்க தனி ஒரு ஆளாக இயங்குவது கடினம். கூட்டாளிகள் இருப்பார்கள்.
அவங்க கூட்டத்திலே நம்ம ஓற்று புகுந்திடனுமாம். ஆனால், கண்டும் காணதது போல இருக்கனுமாம். அவர்களில் ஒருவன், அவனே சொல்லும் வகையில் நடந்துக்கனுமாம். அவன் சொன்னாலும், அதிலே மிகுந்த அக்கரை இல்லாதவன் போல இருக்கனுமாம்.
நடிப்பு, நடிப்பு அது மிக முக்கியம்!
சரி, அவன்தான் சொல்லிட்டானே என்று அதை நம்பி விடவும் கூடாதாம். அதையும் சான்றுகள் கொண்டு ஆராய்ந்து உறுதி படுத்தனுமாம். அறிந்ததில் எந்தச் சந்தேகமும் இருக்கக்கூடாதாம். அந்தச் செய்திகளை சரியாகக் கடத்துபவன்தான் ஒற்றன் என்கிறார்.
“மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.” --- குறள் 587; அதிகாரம் – ஒற்றாடல்
மறைந்தவை கேட்கவற்று ஆகி = மறைவாக நிகழும் செயல்களை, அவர்களே ஒற்றனிடம் சொல்லும் வகையிலே ஆகி; அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று = தான் அறிந்தவையை ஆராய்ந்து எந்தச் சந்தேகமும் இன்றி உறுதிப்படுத்தி தலைமைக்குச் சேர்ப்பவனே ஒற்றன்.
மறைவாக நிகழும் செயல்களை, அவர்களே ஒற்றனிடம் சொல்லும் வகையிலே ஆகி, தான் அறிந்தவையை ஆராய்ந்து எந்தச் சந்தேகமும் இன்றி உறுதிப்படுத்தி தலைமைக்குச் சேர்ப்பவனே ஒற்றன்.
கடந்த நான்கு குறள்களில் ஒற்றின் இலக்கணத்தைச் சொன்னார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)

good advice for state intelligence,