top of page
Search

முகத்தின் முதுக்குறைந்தது ... குறள் 707

28/10/2021 (247)


உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா

உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா

அவளா சொன்னாள் இருக்காது, அப்படி எதுவும் நடக்காது

நம்ப முடியவில்லை, இல்லை, இல்லை … கவிஞர் வாலி, திரைப் படம் – செல்வம் (1966)


இந்த மாதிரியெல்லாம் சந்தேகம் வந்துடும். எப்போது என்றால் முகக்கூறிப்பை கண்டுபிடிக்க முடியலை என்றால். அடுத்தது காட்டும் பளிங்கு என்றால், கடுத்தது காட்டும் முகம் என்றார் குறள் 706ல் நம் பேராசான்.


முகத்துக்கு அறிவு இருக்கா? முகம் ஒரு சடப் பொருள் தானே? அதற்கு எப்படி அறிவு இருக்க முடியும்? இப்படியெல்லாம் சிலர் கேள்வி எழுப்பறாங்களாம்.


நமது உள்ளம் மகிழ்ந்தால் முகம் மலர்கிறது; மனம் நெகிழ்ந்தால் முகம் நெகிழ்கிறது, கண்ணீர் சுரக்கிறது; உள்ளம் சுண்டினால் முகமும் வாடுகிறது – ஆகையாலே நமது உயிரின் வியாபகம் உடல் முழுவதும் பரவினாலும், முகமானது, உயிரின் நுண்ணிய மாற்றங்களை வெளிப்படுத்துவதால் முகத்திற்கு அறிவு அதிகம் என்று கொள்ளலாம் என்கிறார்கள்.


முது என்றால் பேரறிவு என்று பொருளாம்.முதுமை என்றால் அந்த பேரறிவு நிறைந்தப் பருவமாம். முதியவர் என்றால் அறிவில் மிக்கோர் என்று பொருளாம்!

முதியவர் என்றால் மகிழ்ந்து கொள்ளலாம் இனிமேல்.


சரி, எங்கே திருக்குறள்? அதானே? இதோ வந்துடுவோம்.


முகத்தைப்போல முது குறைந்தது கிடையாது என்கிறார் நம் பெருந்தகை. அதாவது, முகம் போல புத்திசாலி கிடையாதம் நம்ம உடம்பிலே. அதன் குறிப்பை மட்டும் படிக்கத் தெரிந்தால் யாரையும் கவர்ந்து விடலாமாம்.


அது எப்படி என்றால், மனம் மகிழ்ந்தாலும், காய்ந்தாலும் அதாங்க நொந்தாலும் அது சட்டென்று காட்டிக் கொடுக்குமாம். அந்தக் குறிப்பை பிடிக்கனும்.


முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்

காயினும் தான்முந்து உறும்.” ---குறள் 707; அதிகாரம் – குறிப்பறிதல்


முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ = முகத்தைவிட அறிவு மிக்கதுன்னு எதாவது இருக்கா; உவப்பினும் காயினும் தான்முந்து உறும் = மனம் மகிழ்ந்தாலும் அமிழ்ந்தாலும் முகம் முந்திக் கொண்டு காட்டிக் கொடுத்துவிடும்


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.






7 views0 comments
Post: Blog2_Post
bottom of page