அண்மையில் நடந்த திருமண விழாவிலே நான் பெரிதும் மதிக்கிறவர் ஒரு கேள்வியை என் கிட்ட வைத்தார்.
எப்படித் தம்பி பெருஞ்செல்வம் வைத்திருந்த சிலர் குறுகிய காலத்திலேயே எல்லாத்தையும் இழந்துடறாங்களேன்னு கேட்டார்.
அது ஆச்சரியமாவும் அதே சமயம் ஒரு எச்சரிக்கையாவும் இருந்தது. அதே நினைப்போட படுத்துட்டேன். கணவில் வழக்கத்துக்கு மாறாக திருவள்ளுவர் வந்தார்.
(அப்போ யார் வழக்கமா வருவாங்கன்னு தானே உங்க கேள்வி – அதை நேரில் சொல்கிறேன்)
திருவள்ளுவர், இரண்டாலே வகுத்தியே நாலாலெ வகுன்னனார். அது என்னான்னு கொஞ்சம் குழம்பி அப்புறம் கண்டு பிடிச்சேன்.
1330/4 =332.5 – 332 வது குறளை எடுத்தா ரொம்ப அழகானதொரு உவமையை சொல்லியிருக்கார்.
சினிமா அரங்கத்துக்கு போறோம். உள்ளே போகும் போது ஒருத்தர், இரண்டு பேரா நுழையுறோம்.
அரங்கம் நிறையறத்துக்கு நேரமாகுது. ஆனா, படம் முடிஞ்சா மொத்தமா வெளியேறிடறோம் இல்லையா. அது போல பெருஞ்செல்வம் போயிடுதாம் – என்ன அழகான உவமை!
அந்தக் குறள்:
“கூத்தாட்டு அவைக்குழாத்தற்றேபெருஞ்செல்வம் போக்கும்அதுவிளிந்தற்று.” --- குறள் 332; அதிகாரம் - நிலையாமை
வள்ளுவரை விடாமே, இதை தடுக்க வழியில்லையான்னு கேட்டேன். தேடிப் பாருன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.
நீங்களும் தேடுங்க ப்ளிஸ்.
நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.
உங்கள்
அன்பு மதிவாணன்
19/01/2021
(---உங்கள் அனைவரின் கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது)
Comments