இனிய உளவாக ... 100, 23/01/2021
- Mathivanan Dakshinamoorthi

- Jan 23, 2021
- 1 min read
Updated: Aug 15
23/01/2021 (6)
“அதை மேல வை.”
“அதை மேல வைப்பா.”
“அதை கொஞ்சம் மேல வைப்பா.”
“தம்பி, அதை கொஞ்சம் மேல வைங்க.”
நிற்க.
மேலே உள்ள நான்கு தொடர்களில், எந்தத் தொடரைப் பயன் படுத்தலாம்.
நாம் ஏவ முயலும் நபர், முன் பின் தெரியாதவராக இருக்கலாம், அல்லது நம்மிடம் வேலை செய்யும் ஒருவராக இருக்கலாம், அல்லது நமது சொந்தமாகவோ, நண்பராகவோ கூட இருக்கலாம்.
நமக்கு எல்லாத் தொடர்களையும் பயன் படுத்தத் தெரியும். இருப்பினும் இனிமையான அந்த கடைசித் தொடர், உள்ளத்தைத் தொடும், செய்ய மறுதலிக்க நினைப்பவரையும் செய்யத் தூண்டும்.
இது வேலை வாங்க மட்டுமல்ல.
உறவுகளை வளர்க்கவும் தான்.
இதைத் தான் திருவள்ளுவப் பெருந்தகை நூற்றில் ஒரு குறளாக அமைத்துள்ளார். இதோ அந்த 100 வது குறள்:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. - 100; இனியவை கூறல்
(இன்னாத = இனியவை அல்லாத)
கையிலே இருக்க பலாப்பழத்தை சாப்பிடாம; காட்டிலே இருக்க கலாக்காயை தேடினாப் போல!
இது நிற்க.

‘இனிமை’ 100ல் இருக்க ‘பயனை’ எங்கே வைத்துள்ளார் என்பதை தேடிக் கொண்டுள்ளேன். உங்களின் உதவி கிடைக்குமா?
நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்.
உங்கள் அனைவரின் கருத்துகளும் வரவேற்கப்படுகிறது.






Comments