top of page
Search

ஒல்லும்வகையான் ... 33, 36

19/02/2021 (33)

நன்றி, நன்றி, நன்றி

அறச்செயல்களை எப்போது செய்யனும்?


ஆசிரியர்: எப்பவும் செய்யனும் இந்த பதில் தான் பொருத்தமாக இருக்கும். இருந்தாலும், வள்ளுவப்பெருந்தகை, என்ன சொல்கிறார் என்றால், எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்குதோ, அப்போதெல்லாம் தப்பாம செய்யனும்.


நாம உதவலாம் நாளைக்குன்னு நினைத்தால் அது முடியாமலும் போகலாம். அப்படியே செய்தாலும் அதுக்கு பலனில்லாமலும் போகலாம். ஒருத்தருக்கு தக்க சமயத்திலே உதவுகிற வாய்ப்பு நழுவியும் போகலாம். அதனாலே, வாய்ப்பு கிடைக்கும் போது சட்டுனு செய்துடனும்.


‘விதித்தன செய்தல்; விலக்கியன ஒழித்தல்’ இவ்வளவு தான் அறம்னு பரிமேலழகர் ரொம்ப எளிமையா சொல்கிறார். செய்ய வேண்டியதை உடனே செய்; தள்ள வேண்டியதை எப்பவும் செய்யாதே, என்ன புரிஞ்சுதா?

நம்மாளு: புரிஞ்சுது ஐயா. அந்த குறள்களை சொன்னீங்கனா குறிச்சுக்குவேன்.


ஆசிரியர்: குறள்கள் 33 மற்றும் 36.


“ஒல்லும்வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல்.” --- குறள் 33; அதிகாரம் - அறன் வலியுறுத்தல்


(ஒல்லும் = இயலும்; வகையான் =வழிகளிலெல்லாம்; ஓவாதே =ஒழியாமல், தவறாமல்; செல்லும்வாய் எல்லாம்=செயத்தகும் இடங்களிலெல்லாம்; செயல் = செய்க)


“அன்றறிவாம் என்னாதுஅறம்செய்கமற்றது பொன்றுங்கால்பொன்றாத்துணை.” ---குறள் 36; அதிகாரம் - அறன் வலியுறுத்தல்


(அன்றறிவாம் = நாளைக்கு பார்த்துக்கலாம், அப்புறம் தெரிஞ்சிக்கிட்டு; என்னாது = என நினைக்காமல்; அறம்செய்க = அறம் செய்துடனும்; மற்று – அசை நிலை; அது = அது; பொன்றுங்கால் = அழியும் காலத்தில், நாம இந்த உலகத்தை விட்டு போகும்போது; பொன்றா = அழிவில்லா; துணை = துணை, உதவி)


நம்மாளு: அப்போ, அறச்செயல்களை எப்பல்லாம் வாய்ப்பு கிடைக்குதோ, அப்புறம் செய்யலாம்னு தள்ளிப்போடாம, உடனடியா செஞ்சிடனும் இல்லையா. ஐயா? நேற்றைய கேள்விக்கு பதில் சொல்றேன்னு சொன்னீங்களே?


ஆசிரியர்: நன்று, நன்று. நேற்று குறள் 166 இல் ‘உடுப்பதூஉம், உண்பதூஉம்’ ஏன் போட்டு இருக்காருன்னா, பொறாமை பட்டு அறச்செயல்களை தடுத்தா அவனை விட்டு நல்லது எல்லாம் ஒன்று ஒன்றா விலகி கடைசியிலே அவன் கிட்ட ஒன்றுமே இருக்காதுன்னு சொல்றதுக்காக ‘உம்’ விகுதியை சேர்த்திருக்கார் நம்ம வள்ளுவப்பெருந்தகை. நாளைக்கு பார்கலாம்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்.




7 views0 comments
Post: Blog2_Post
bottom of page