top of page
Search

உள்ளுவது எல்லாம் ... குறள் 596

Updated: Feb 22, 2023

03/02/2021 (17)

நன்றி, நன்றி, நன்றி.

உள்ளத்தை உயர்த்திட்டா போதும் நாமளும் சூப்பர் ஸ்டார் ஆயிடலாம்ன்னு வள்ளுவப் பெருந்தகை சொன்ன உடனே நம்மாளு உட்கார்ந்து யோசனை பண்ண ஆரம்பிச்சாரு.


மழை வந்து தண்ணீர் உயர்ந்தது. தண்டு மேலே வர பூ மேலே சுலபமா வந்தது. நமக்கு ‘எது’ வந்தா நம்ம உள்ளம் உயரும்?


நல்ல, உயர்ந்த எண்ணங்கள் தொடர்ந்து வந்தா உள்ளம் உயரும். எண்ணங்களில் தான் எழுச்சியிருக்கு. ஏற்றத்துக்கும் அதுவே காரணம். அதை தான் ‘மனம் போல வாழ்க்கை’ ன்னு சொன்னாங்க போல.


யோசனை பண்ணிட்டு இருந்த நம்மாளுக்கு டக்கென கவனம் வந்துட்டுது 596 ஆவது குறள்:


உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து” --- குறள் 596; அதிகாரம் - ஊக்கமுடைமை


உள்ளுவது = நினைப்பது; மற்று = அசைச்சொல் ; அது தள்ளினும் = தப்பினாலும், அது கிடைக்கலனாலும்; தள்ளாமை நீர்த்து = தவறில்லை


அப்போ நாம செய்ய வேண்டியது, உயர்ந்ததை எண்ணனும்.

அப்போ தான் இந்த பாட்டு பின்னாடியிருந்து கேட்டுது.


வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்


சரியானதைப் பார்கனும். எங்கே பார்கனும்னா மனசிலே பார்கனும்ன்னு சொல்லிக்கொண்டே வள்ளுவப் பெருந்தகை நம்மாளு கிட்ட வந்தாரு.


நாமும் தொடரலாம்.


இத் தொடரை வாழ்த்தி வரவேற்கும் அன்பு நெஞ்சங்களுக்கு எனது நன்றிகள்.

நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்




Post: Blog2_Post
bottom of page