top of page
Search

அழிவந்த செய்யினும் ... 807, 109

29/12/2021 (308)


நம்மைஅழிக்க வல்ல துண்பங்கள்/தீமைகள் செய்தாலும் அவர் முன்பு செய்த நல்லது ஒன்றை நினைக்க நமது வருத்தங்கள் மறையும் என்று நம் பேராசான் குறள் 109ல் தெரிவித்து இருந்தார்.


கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்.” --- குறள் 109; அதிகாரம் -செய்ந்நன்றியறிதல்


அதையே, மேலும் வற்புறுத்தும் விதமாக பழைமையிலும் ஒரு குறளை வைத்துள்ளார்.


இங்கே என்ன சொல்கிறார் என்பது மிகவும் முக்கியம். இல்லறத்தின் அடிநாடியே அன்பு என்று அழுத்தமாகச் சொல்லும் நம் வள்ளுவப் பெருந்தகை அன்பின் வழி நிற்பின் நட்புகள் நம்மை அழிக்கக்கூடியது போல (அப்பா, உயிரே போகுதுன்னு சில சமயம் சொல்லுவோம். ஆனால், உயிர் போவது இல்லை. அது நமது உச்சபட்ச கற்பனை.) சில செய்தாலும், அவர்களின் அன்பான தொடர்புகளை அறுத்துக் கொள்ள மாட்டார்களாம்.


அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்

வழிவந்த கேண்மை யவர்.” --- குறள் 807; அதிகாரம் - பழைமை


அழிவந்த செய்யினும் அன்பு அறார் = நம்மை அழிப்பது போன்ற செயல்களைச் செய்தாலும் அவர்களிடம் கொண்ட அன்பை அறுத்துக் கொள்ள மாட்டார்களாம்; அன்பின் வழிவந்த கேண்மை யவர் = அன்பின் பாற்பட்டு நட்பு உண்டாகி அது பழைமையும் ஆனவர்கள்.


இப்போது அன்பு அருளாக மாறும் தருணம் வந்துவிட்டது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




8 views2 comments
Post: Blog2_Post
bottom of page