top of page
Search

உள்ளொற்றி உள்ளூர் ... 927, 1040

Updated: Mar 20, 2023

28/09/2021 (217)

நேற்றைய குறளில் கூடாநட்பு என்றால், அந்த நட்பைச் சாகடிப்போம் என்று பார்த்தோம். அதைப் படித்துவிட்டு என் நட்பு ஒருவர் சண்டைக்கு வந்துவிட்டார்.


அவர் நினைத்துக் கொண்டது ‘ஆளையே போட்டுத் தள்ளுவது’ ! அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க. அந்த நட்பை மெல்ல மறக்கடிங்க, விலகுங்க அவ்வளவுதான். அதுக்கும் மேல எல்லாம் போகாதீங்க ப்ளிஸ்.


நாம ஏற்கனவே ஒரு குறள் பார்த்தோம். காண்க 17/09/2021 (206). யாரைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கும்ன்னு கேள்விக்கு பதிலாக வள்ளுவப் பெருமான் சொல்லியிருந்தார்:


இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும்.” --- குறள் 1040; அதிகாரம் - உழவு


ஒரு பொருளும் இல்லையே என்று அசையாமல் உட்கார்ந்து இருப்பவரைக் கண்டால் அள்ள அள்ள கொடுக்கும் தன்மைத்தான நிலமென்னும் நல்லாள் தம்மை பயன்படுத்த வில்லையே என்று மனம் புண்பட்டுச் சிரிப்பாள்.


இன்றைக்குப் பார்க்கவிருப்பது ஊர் சிரிப்பது எப்போது? அதற்கும் ஒரு குறள் வைத்திருக்கிறார்.

அதற்கும் முன்னாலே கவிஞர் வாலி அவர்களின் ஒரு திரைப்பட பாடலைப் பார்க்கலாம்.

… புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்

ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்

அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா

இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா …

ஹே தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்

இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி

என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி சாமி சாமி


உள்ளூரில் இருப்பவங்களுக்கு நம்ம தகிடுதத்தம் தெரியும்; அதனாலே அவர்கள் நம்மைப் பார்த்து இகழ்ந்து நகைப்பார்களாம். அது என்ன தகிடுதத்தம்?

அதாங்க, எப்பவும் தண்ணி அடிச்சுட்டு மட்டையாகி கிடப்பது இல்லைன்னா அலம்பல் பண்ணுவது.


உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

கள்ளொற்றிக் கண் சாய்பவர்.” --- குறள் 927; அதிகாரம் – கள்ளுண்ணாமை


கள்ளொற்றிக் கண் சாய்பவர் = கள்ளு குடிக்கும் போது மறைந்து தான் குடிப்பாங்களாம், அப்புறம்தான் அறிவு மயங்க அலம்பல் பன்ணி மட்டை ஆவார்கள்; உள்ளுர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர் = உள்ளூரில் உள்ளவர்கள் நம்மாளின் உள் அடி தெரிந்து கொண்டு எப்போதும் ஏளனமாகச் சிரிப்பாங்க.


கள்ளைத் தள்ளிடுங்கன்னு சொன்னா, அப்போ மத்தது பரவாயில்லையான்னு கேட்கப்படாது. கள்ளுன்னா அந்த வகையறா எல்லாம் தாங்க. புரிஞ்சுக்கோங்க ப்ளிஸ்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.






7 views0 comments
Post: Blog2_Post
bottom of page