top of page
Search

முகம் நோக்கி நிற்க ... குறள் 708

29/10/2021 (248)

சிலர் முன்னாடி நின்றால், நாம எதைக் குறித்து வந்திருக்கிறோம், நமக்கு என்ன தேவையென்று அறிந்து அதற்கு வேண்டிய தீர்வுகளை கொடுப்பாங்க.

அதுபோல, நம் உள்ளக்கிடக்கையை பார்த்த மாத்திரத்தில் அறியும் ஒரு தலைவனைப் பெற்றால் அவரிடம் நாம் எதுவும் சொல்ல வேண்டாம். நாம அவர்கள் முகம் நோக்க நின்றாலே போதும். நம்ம காரியத்திற்கு தீர்வு கிடைத்து விடும்.


முகத்தைப் பற்றிய மூன்றாவது குறளைத்தான் நாம பார்க்கப் போகிறோம். கடுத்தது காட்டும் முகம் என்றார் குறள் 706ல். முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ என்றார் குறள் 707ல்.


உற்றது உணர்வார்ப் பெறின்.” --- குறள் 708; அதிகாரம் – குறிப்பறிதல்


அகம்நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் = (நமது, அமைச்சரது) உள்ளத்தவிப்பை ஊடுருவிப் பார்த்து தீர்க்கும் உணர்வாளர்கள் (தலைவர்கள், அரசர்கள்) அமைந்து விட்டால்; முகம் நோக்கிநிற்க அமையும் = (நாம எதுவுமே பண்ண வேண்டாம்) அவங்க முகத்தை நோக்கி நின்றாலேப் போதும்.

சரி. நாம அப்படியே கொஞ்சம் ஆன்மீகத்துக்குள்ளே போவோம். நேரம் இருந்தால் மேற்கொண்டு படிங்க.

ஆன்மீகம் என்றால் என்ன?


நாம பார்த்தோம்; கண் பார்ப்பது கிடையாது, காது கேட்பது கிடையாது …இப்படி நம் புலன்களை நம் உள்ளே இருக்கும் ஒன்றுதான் இயக்குது. அது காணாமல் போனா மீதியெல்லாம் இருந்தும் பயன் இல்லை. இது தெரியாதா எனக்குன்னு சொல்றீங்க. அதானே!


இது தெரிந்தால் நாம் தான் ஆன்மீகவாதி. வேற ஒன்றும் இல்லை.

“… உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் “ அதுதான் ஆன்மீகம். அது நம்மை அமைதியாகவும், சிறப்பாகவும், முழுமையாகவும் உணரச் செய்யும்.


சரியாகத்தான் சொல்கிறாய். ஆனால், எப்படிப்பா முடியும்?


அதற்குத்தான் நமக்கு ஒரு குரு கிடைக்கனும்.


குரு எப்போ கிடைப்பார்? நாம தேடிக்கொண்டேயிருந்தால் கிடைப்பார், கேளுங்கள் கொடுக்கப் படும்; தட்டுங்கள் திறக்கப்படும். (Ask you shall receive). திருமந்திரத்தில் திருமூலத் தெய்வம் சொல்லி வைத்துச் சென்று இருக்கிறார்.

அது என்னன்னு பிறகு பார்க்கலாம். நேரம் ஆயிட்டுதுன்னு ஆசிரியர் கிளம்பி விட்டார்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




14 views0 comments
Post: Blog2_Post
bottom of page