top of page
Search

அகலாது அணுகாது தீக்காய்வார் ... குறள் 691

13/10/2021 (232)

தூதுவர்கள் இருவகை. வகுத்து உரைப்பான், வழி உரைப்பான். இருவருக்கும் பொதுவான பண்புகளைத் தூது அதிகாரத்தின் முதல் இரண்டு குறள்களிலும், வகுத்து உரைப்பார்களுக்கு சிறப்பாக அடுத்த ஐந்து குறள்களும், வழிஉரைப்பார்களுக்கான சிறப்பு தகுதிகளை கடைசி மூன்று குறள்களிலும் சொல்லி முடித்திருந்தார் நம் பேராசான்.


கடைசி குறள் நாம ஏற்கனவே பார்த்ததுதான், ஒரு மீள் பார்வைக்காக:


ஒரு அரசனுக்கோ இல்லை தலைவனுக்கோ தூதுவனாக இருப்பவன், தனக்கு அழிவு வந்தாலும்கூட, அதற்காக அஞ்சாமல் தன் தலைமைக்கு வரும் நன்மையை உறுதி செய்வானாம். இல்லை, இல்லை ‘செய்வாராம்’. மரியாதை ப்ளீஸ்.


இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு

உறுதி பயப்பதாம் தூது.” --- குறள் 690; அதிகாரம் – தூது


தூது அதிகாரத்துக்கு அடுத்த அதிகாரம் மன்னரைச் சேர்ந்து ஒழுகல் – 70வது அதிகாரம். தூதுவர்கள் தங்களைத் தலைவர்கள் விரும்பும் வண்ணம் இருக்க வேண்டும் என்று குறள் 681ல் குறித்திருந்தார்.


இப்போது, தலைவரை நெருங்கியாகி விட்டது. தலைவர்களிடம் எப்படி பழகுவது? அதைப் பற்றியக் குறிப்புகளை மன்னரைச் சேர்ந்து ஒழுகலில் சொல்லப் போகிறார்.


தலைவர்களுக்கு எப்போதுமே அழுத்தம் இருக்கும். அவர்களின் மனம் பல வேறு நிலைகளில் பயனம் செய்யும். எப்போதும் ஒரே மாதிரி இருக்கும் தலைமை மிக அபூர்வம்.


நமக்கே மூடு(mood), அதாங்க மன நிலை மாறிக்கொண்டு இருக்கு இல்லையா அது போல தலைவர்களுக்கு பல மாறுபாடுகள் இருக்குமாம். நம்ம மன நிலையைக் கண்டு பிடிப்பதிலே குழந்தைகள் கில்லாடியாக இருப்பார்கள். சமயம் பார்த்து சாதித்துக் கொள்வார்கள். இது நிற்க.


ஆக, மன நிலை மாறிக் கொண்டே இருப்பதால் வேந்தர்களை இகல் வேந்தர் என்கிறார் நம்ம பேராசான். அவர்களுக்கு மிக அருகிலும் போகக் கூடாதாம், ரொம்ப விலகியும் இருக்கக் கூடாதாம். அது எப்படி? அழகாகச் சொல்கிறார் நம்ம பெருந்தகை. தீ மூட்டி குளிர் காயும் போது எப்படி ஒரு distance maintain பண்ணுவோம், அதாங்க கொஞ்சம் தள்ளியிருந்து குளிர் காய்வோமோ அப்படி இருக்கனுமாம்.


அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்.” --- குறள் 691; அதிகாரம் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.






4 views0 comments
Post: Blog2_Post
bottom of page