top of page
Search

உவப்பத் தலைக்கூடி ... குறள் 394

03/11/2021 (253)

கற்றிலன் ஆயினும் கேட்க என்றார் நம் பேராசான் குறள் 414ல். இதைப் பற்றி யோசனை பண்ணிட்டு இருந்தேன்.


அது மிகவும் முக்கியம் என்று தோன்றுகிறது. நமக்குத் தெரியலைன்னா பரவாயில்லை. தெரிந்தவர்களோட பழகினால், பழக்கத் தோஷம்ன்னு சொல்வாங்களே அது போல, நாமும் மனக்கலாம் பூவோட சேர்ந்து!


புத்தகத்தோட பழகனும்னு என் ஆசிரியர் சொன்னது நினைவுக்கு வருது. புத்தகங்களோடவும் பழகனுமாம். அது கடினாமாக இருந்தால் அதைக் கற்றவற்களோட பழகனும்ன்னு சொல்லியிருந்தார். அது இப்பதான் புரியுது.


இது ஒரு வகை பாவனை. இதைப் பழக பழக அந்த வித்தை கை வரும்.


ஆங்கிலத்தில் சில பழமொழிகள் இருக்கு. அதிலே ஒன்று “If it walks like a duck and quacks like a duck then it is a duck”. அது வாத்து மாதிரி நடந்தால், அது வாத்து மாதிரி குவாக், குவாக் என்று குரல் கொடுத்தால் சந்தேகமேயில்லை அது வாத்துதான்!


இன்னொரு பழமொழியும் இருக்கு. அது என்னன்னா “Fake it till you make it”. அதாங்க பாவனை. நாம என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்.


சரி, இன்றைக்கு குறள் இல்லையான்னு கேட்கறீங்க அதானே? இருக்கு. நிச்சயமாக இருக்கு.


புலவர்களுக்கும் கற்றவர்களுக்கும் என்ன வேலை தெரியுங்களா? கூடி, கூடி பேசுவதுதானாம். நாமளும் அதானே பண்றோம். அது என்ன பெரிய செய்தி?

நாம சும்மா கடலை போடுவோம். புரளி பேசுவோம். ஆனால், அவங்க கற்றதை பரிமாறிக் கொள்வார்களாம் அவ்வளவுதான் செய்தி. அப்படி அவர்கள் பேசி பிரியும் போது நாம மீண்டும் எப்ப சந்திப்போம்ன்னு நினைத்துக் கொண்டே பிரிவார்களாம். இது, இது தான் நல்ல நட்பு, உறவுக்கு இலக்கணம்.


உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.”--- குறள் 394; அதிகாரம் - கல்வி


உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே = மகிழுமாறு ஒன்றாக இனைந்திருந்து இவங்களை எப்போது மீண்டும் சந்திப்போம் என்று எண்ணி பிரிதல் அதுதான்; புலவர் தொழில் = கற்றவர்களின் வேலை; உவப்ப = மகிழ; உள்ள = நினைக்க; அனைத்தே = அத்தன்மைத்தே


இதைத்தான் ‘…கற்றாரை கற்றாரே காமுறுவர்’ன்னு நம்ம ஒளவைப்பாட்டி சொல்லியிருக்காங்க!


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.





13 views0 comments
Post: Blog2_Post
bottom of page