top of page
Search

வினைக்குரிமை நாடிய ... 518


14/12/2022 (650)

செய்வானை நாடி, வினை நாடி, காலத்தோடு முடிப்பார்களா என்பதை அறிந்து வேலையைக் கொடுக்கனும் என்றார் குறள் 516ல்.


காலத்தோடு முடிப்பது முக்கியம் என்றால், காலத்திற்கு ஏற்றார் போலும் அந்த செயல் அமையனும். அதாவது, உலகம் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும்; புதுமைகளை விரும்பும்; செய்யும் செயல்களின் செயல் முறைகள் மாற்றம் பெறும்; அதற்கேற்றார்போல் செயல்களே மாறிவிடும்!


ஆதலினால், skill upgrade (திறன் மேம்படுத்தல்), skill development (திறன் வளர்ச்சி) ஆகியவை மிகவும் முக்கியம்.


அதை நம் பேராசான் குறிப்பிட்டு காட்டுகிறார்.


ஒரு செயலை முடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தபின், அந்த செயலுக்குத் தேவையான பயிற்சிகளும், திறன்களும் நம்மிடம் உள்ளவர்களுக்கு இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டியதும் தலைமையின் கடமை என்கிறார். அப்படி இல்லையென்றால், முதலில், அவர்களின் திறத்தை மேம்படுத்த வேண்டும் என்கிறார்.


வினைக்குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரியன் ஆகச் செயல்.” --- குறள் 518; அதிகாரம் – தெரிந்து வினையாடல்


வினைக்குரிமை நாடிய பின்றை = செய்யவேண்டிய செயலுக்கு தேவையானதை ஆராய்ந்த பின்; அவனை = நம்முடன் உள்ளோரை; அதற்குரியன் ஆகச் செயல் = அந்த செயலைச் செய்யவதற்குரியவனாக உயர்த்துக.


செய்யவேண்டிய செயலுக்கு தேவையானதை ஆராய்ந்த பின்; நம்முடன் உள்ளோரை; அந்த செயலைச் செய்யவதற்குரியவர்களாக உயர்த்துக.


‘உரியன்’ என்பதை இருவகையில் பார்க்கலாம்.


ஒன்று: திறன் மேம்பாடு – இது முக்கியம்;


இரண்டு: ownership அதாவது, அவர்களை அந்தச் செயலுக்கு பொறுப்பானவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துவது. Sense of belonging – நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பு என்ற உணர்வும் மிக முக்கியம்.


அப்படி உணர்ந்து அவர்களாகவே செயலகளைச் செய்து கொண்டிருப்பார்கள். சில போது, சில குறுகிய தலைமைகளுக்கு மாறுபட்ட ஒரு எண்ணம் வரலாம். மற்றவர்களுக்கு இல்லாத அக்கரை இவனுக்கு மட்டும் ஏன்? – அவ்வளவுதான், உடனே சந்தேகப் பேய் வந்து அமர்ந்து கொள்ளும். பிறகு நடப்பதுதான் உங்களுக்குத் தெரியுமே!


நம்மாளு: ஐயா, அதைப்பற்றி நம் பேராசான் ஏதாவது சொல்லியிருக்காரா?


ஆசிரியர்: நாளை தொடருவோம்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்




Post: Blog2_Post
bottom of page